Published:Updated:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: 5 நிறுவனங்களுக்கு அபராதம்!

Vikatan Correspondent
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: 5 நிறுவனங்களுக்கு அபராதம்!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: 5 நிறுவனங்களுக்கு அபராதம்!
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: 5 நிறுவனங்களுக்கு அபராதம்!

பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முடக்கப்பட்ட லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், மேடோ அக்ரோ பார்ம் உள்ளிட்ட 5 நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், தலா 50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு மீறி சொத்துக்களை குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனம், மேடோ அக்ரோ பார்ம் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களின் சொத்துக்களை நீதிமன்றம் முடக்கி வைத்துள்ளது.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிவு பெற உள்ள நிலையில் ஐந்து நிறுவனங்கள் தரப்பில், முடக்கப்பட்ட சொத்துக்களை உடனடியாக விடுவிக்க கோரி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், பெங்களூரு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா இன்று தீர்ப்பளித்தார். அப்போது, ஐந்து நிறுவனங்களின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மனு மூலம் நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக கண்டனம் தெரிவித்தார்.

மேலும், 5 நிறுவனங்களுக்கும் தலா 50 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.