Published:Updated:

முல்லைப்பெரியாறு: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Vikatan Correspondent
முல்லைப்பெரியாறு: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
முல்லைப்பெரியாறு: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
முல்லைப்பெரியாறு: மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக மேற்பார்வைக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ள தமிழக அரசுக்கு கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அத்துடன் நீர்மட்டத்தை உயர்த்துவதையும், அணையின் பாதுகாப்பை கண்காணிக்கவும் 3 பேர் கொண்ட மேற்பார்வை குழு ஒன்றை அமைக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் கூறுகையில், ''உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை கண்காணிக்க மேற்பார்வை குழு அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைச்சர்கள் குழு மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களை கலைக்கவும் இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.