Published:Updated:

பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் ரத்து!

Vikatan Correspondent
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் ரத்து!
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் ரத்து!
பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் ரத்து!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து புதிய பிரதமராக நரேந்திர மோடி கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இதையடுத்து கடந்த 15ஆம் தேதி தனது முதல் வெளிநாடு பயணமாக, நரேந்திர மோடி பூடானுக்கு சென்றார்.

இதைத் தொடர்ந்து அடுத்த மாதம் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுத்துள்ள அறிவிப்பில், ''அடுத்த மாதம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் செல்லமாட்டார்'' எனக் கூறப்பட்டுள்ளது.