Published:Updated:

அந்த தங்க நிமிடங்கள்...

அந்த தங்க நிமிடங்கள்...

பிரீமியம் ஸ்டோரி

சாலை விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. விபத்தில் சிக்கியவர்களை

அந்த தங்க நிமிடங்கள்...

மருத்துவமனையில் கொண்டுபோய் சேர்த்தால்கூட பிழைப்பது அரிதாகத்​தான் இருக்கிறது. கேட்டால், 'ஒரு மணி நேரத்துக்கு முன்பு கொண்டு வந்திருந்தால், ஒரு வேளை காப்​பாற்றி இருக்கலாம்!’ என்று சொல்​கிறார்கள். மருத்துவ உலகில் இந்த நேரத்தை 'கோல்டன் ஹவர்ஸ்’ என்​கிறார்கள். சாலையில் விபத்தில் சிக்கியவர்களை, ஒரு சிலர் காப்பாற்ற நினைத்​தாலும், 'நமக்கெதற்கு இந்த வீண் பிரச்னை? போலீஸ் - விசாரணை என்று வந்தால் யார் பதில் சொல்வது? மேலும் மருத்துவமனையிலும் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார்களே...’ என்பதால்தான் ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

இந்தப் பிரச்னைக்கு கேரள சட்டசபையில் உள்துறை அமைச்சர் கொடியேரி பாலகிருஷ்ணன் அருமையான தீர்வு சொல்லி இருக்​கிறார். 'விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவினால் போலீஸ் வழக்குப் பதிவு செய்யும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் பலர் உதவி செய்வதில்லை. இனிமேல் யாரும் அப்படி பயப்படத் தேவையில்லை. சாலை விபத்தில் சிக்குபவர்களை உடனடியாகத் தங்கள் காரிலோ, அல்லது வேறு வாகனத்திலோ கொண்டு சென்று, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பவர்களுக்கு இனிமேல் சன்மானம் வழங்கப்​படும்!’ என்று அறிவித்து இருக்கிறார்.

இதற்காக ஒவ்வொரு எஸ்.பி. அலுவலகங்களுக்கும் தலா

அந்த தங்க நிமிடங்கள்...

11 லட்சம் ஒதுக்கவும் செய்திருக்கிறார். எந்தக் காரணம் கொண்டும் வழக்குத் தொல்லை இல்லை, போலீஸ் தொந்தரவும் இருக்காது என்று அமைச்சர் உறுதியளித்து இருப்பதால், இனி மனிதர்கள், பயமின்றி மனிதாபி​மானத்துடன் செயல்பட முடியும். இந்த விஷயத்தில் கேரளாவை அனைத்து மாநிலங்களும் தயக்கமின்றிப் பின்பற்ற​லாமே!

- எஸ்.ஏ.தாஹீர், திருநெல்வேலி

அந்த தங்க நிமிடங்கள்...
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு