Published:Updated:

மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்பு!

விகடன் விமர்சனக்குழு
மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்  வேட்புமனு ஏற்பு!
மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்பு!
மாநிலங்களவை தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்  வேட்புமனு ஏற்பு!

சென்னை: மாநிலங்களவை இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணனின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதிக்கு சுடுகாட்டு ஊழலில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, தற்போது புதிய உறுப்பினர் தேர்வுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில், மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த 16ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலில், அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் 4 சுயேட்சைகள் என மொத்தம் 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

வருகின்றம் 24 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மனுக்களைத் திரும்பப் பெற 26 ஆம் தேதி கடைசி நாள்.

இந்நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. மனுத் தாக்கல் செய்ய 10 எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வேண்டும். ஆனால் 4 சுயேட்சைகளுக்கும் எந்த ஒரு எம்.எல்.ஏ.க்களும் முன்மொழியவில்லை.

இதனால், சுயேட்சைகள் 4 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சுயேட்சைகளின் மனுக்கள் தள்ளுபடியானதால் அ.தி.மு.க. வேட்பாளர் நவநீதகிருஷ்ணன் போட்டியின்றி தேர்வாகிறார்.