Published:Updated:

சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!

விகடன் விமர்சனக்குழு
சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!
சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!
சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்வுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்!

புதுடெல்லி: சர்க்கரை மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷோபா ஓசா, ''நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது விலைவாசி உயர்வு குறித்து பாரதிய ஜனதா பெருமளவில் பேசியது.

ஆனால் தற்போது, சில கசப்பான மருந்துகளை மக்கள் உட்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதன் அர்த்தம் என்ன?. ரயில் பயணிகள் கட்டணம், சரக்கு கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி உறுதியளித்த நல்ல நாட்கள் அடுத்த தேர்தலுக்குப் பின்னர் தான் வருமா? என மக்கள் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்றார்.