Published:Updated:

சமூக பிரச்னை: பிரதமர் மோடியிடம் நடிகர் அமீர்கான் நேரில் கோரிக்கை!

விகடன் விமர்சனக்குழு
சமூக பிரச்னை: பிரதமர் மோடியிடம் நடிகர் அமீர்கான் நேரில் கோரிக்கை!
சமூக பிரச்னை: பிரதமர் மோடியிடம் நடிகர் அமீர்கான் நேரில் கோரிக்கை!

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய இந்தி நடிகர் அமீர்கான், தான் எழுப்பிய சமூக பிரச்னைகள் குறித்து உரிய கவனம் செலுத்துவதாக பிரதமர் தன்னிடம் உறுதியளித்ததாக கூறினார்.
 

சமூக பிரச்னை: பிரதமர் மோடியிடம் நடிகர் அமீர்கான் நேரில் கோரிக்கை!

பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கான் சமூக பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து தனது டி.வி. தொடரான சத்யமேவ ஜெயதேவில் முக்கியத்துவம் கொடுக்கும் பிரச்னைகள் குறித்து விளக்கி கூறினார்.

பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமீர்கான், "தான் எழுப்பிய பிரச்னைகள் குறித்து உரிய கவனம் செலுத்துவதாக பிரதமர் தன்னிடம் உறுதியளித்தாக" கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ள அமீர்கான், பிரதமரின் மதிப்புமிக்க நேரத்தை என்னை சந்திப்பதற்காக ஒதுக்கி தந்தமைக்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மாற்றத்தை ஏற்படுத்துவோம் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்திருப்பது குறித்தும், தனது நிகழ்ச்சிகளில் பேசப்பட்ட பிரச்னைகள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இச்சந்திப்பு முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டுள்ளது.