Published:Updated:

நக்சல் பாதிப்பு: அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் 27ம் தேதி ஆலோசனை!

விகடன் விமர்சனக்குழு
நக்சல் பாதிப்பு: அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் 27ம் தேதி ஆலோசனை!
நக்சல் பாதிப்பு: அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் 27ம் தேதி ஆலோசனை!
நக்சல் பாதிப்பு: அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் 27ம் தேதி ஆலோசனை!

புதுடெல்லி: நக்சல் பாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் வருகின்ற 27 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் ஒடிசா, பீகார், மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட ஒன்பது மாநிலங்கள் நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் ஆகும். நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநில உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி,  ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் இந்த முதல் கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் அனில் கோஸ்வாமி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளின் தற்போதைய நிலை குறித்தும், அதனை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி புதிய வரைவு திட்டம் ஒன்றை வகுப்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.