Published:Updated:

மும்பை பா.ஜ. - சிவசேனா எம்.பி.க்கள் எதிர்ப்பு: புறநகர் ரயில் கட்டண உயர்வு குறைய வாய்ப்பு!

 மும்பை பா.ஜ. - சிவசேனா எம்.பி.க்கள் எதிர்ப்பு: புறநகர் ரயில் கட்டண உயர்வு குறைய வாய்ப்பு!
மும்பை பா.ஜ. - சிவசேனா எம்.பி.க்கள் எதிர்ப்பு: புறநகர் ரயில் கட்டண உயர்வு குறைய வாய்ப்பு!

புதுடெல்லி: ரயில் கட்டண உயர்வால் மும்பை புறநகர் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும், இதனால் புறநகர் ரயில்களுக்கான கட்டணம் உயர்த்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவிடம், மகாராஷ்ட்ரா மாநில பாஜக மற்றும் சிவசேனா எம்.பி.க்கள் நேரில் வலியுறுத்தினர்.
 

 மும்பை பா.ஜ. - சிவசேனா எம்.பி.க்கள் எதிர்ப்பு: புறநகர் ரயில் கட்டண உயர்வு குறைய வாய்ப்பு!

மகாராஷ்ட்ராவின் மும்பை மற்றும் தானே பகுதிகளைச் சேர்ந்த 10 எம்.பி.க்கள், டெல்லியில் அமைச்சர் சதானந்த கவுடாவை இன்று சந்தித்துப் பேசினர். அப்போது, ரயில் கட்டண உயர்வின் காரணமாக மும்பை புறநகர் ரயில்களின் கட்டணம் இரு மடங்கு வரை உயரும் வாய்ப்புள்ளதாகவும், இது மும்பை மக்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும் மத்திய அமைச்சரிடம், எம்.பி.க்கள் கூறியதாக தெரிகிறது.
 
மும்பை புறநகர் ரயில்களுக்கான கட்டணம் உயர்த்துவதை மறுபரிசீலனை செய்வதுடன், ரயில்வே பட்ஜெட்டில், மும்பை புறநகர் ரயில்களின் முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு குறித்து சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. கீர்த்தி சோமையா கூறுகையில், ரயில் கட்டணத்தை உயர்த்தும் முடிவு முந்தைய காங்கிரஸ் கட்சியின் அறிவிப்பு என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். ஆனால், இந்த முடிவு பொது மக்களை வெகுவாக பாதிக்கும். எனவே, அமைச்சர் தனது சகாக்களுடன் ஆலோசித்து இதற்கான தீர்வை விரைவில் முன்வைக்க வேண்டும். இதுமட்டுமின்றி மும்பை ரயில்வேக்கு தேவையான நீண்ட காலத் திட்டங்கள் குறித்தும் விவாதித்தோம்" என்றார்.

புறநகர் ரயில் கட்டண உயர்வை தளர்த்த பரிசீலனை

இதனிடையே ரயில் கட்டண உயர்வு வாபஸ் பெறப்பட மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் புறநகர் ரயில் பயணிகளின் சுமையை ஓரளவு குறைக்க, புறநகர் ரயிலுக்கான கட்டண உயர்வை சற்று தளர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், இருப்பினும் இதுகுறித்த இறுதி முடிவை பிரதமர் மோடியே எடுப்பா என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.