Published:Updated:

புதுவையில் காங்கிரசார் ரயில் மறியல்: முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் கைது!

புதுச்சேரி: கட்டண உயர்வை கண்டித்து புதுவையில் காங்கிரசார் ரயில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதுவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை 11 மணிக்கு புதுவை முதலியார்பேட்டை ரயில்வே கேட் அருகே இளைஞர் காங்கிரசார் திரண்டனர். பின்னர் அவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி வந்த பயணிகள் ரயிலை அவர்கள் வழிமறித்தனர். மத்திய அரசின் ரயில் கட்டண உயர்வை எதிர்த்து கோஷமிட்டனர். இதையடுத்து புதுவை முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம், காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியம் உள்பட 25 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியம், முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம் தலைமை தாங்கினார்கள். இளைஞர் காங்கிரஸ் தலைவர் இளைராஜா, துணைத்தலைவர் சரவணன், பொதுச்செயலாளர்கள் சத்தியவேந்தன், ராஜாராம், கோபாலமூர்த்தி, செய்தி தொடர்பாளர் ஏ.வி. வீரராகவன், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் சையது உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர்.