Published:Updated:

தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!
தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!
தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்!

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ''கடந்த ஜூன் 18 ஆம் தேதி 46 தமிழக மீனவர்களும், 19 ஆம் தேதி 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மேலும் 11 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் 64 பேரையும் அவர்களின் 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று  அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.