Published:Updated:

பாதுகாப்பு துறையை நவீனப்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு: அருண் ஜெட்லி தகவல்!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: வரவிருக்கும் பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு, அந்த துறை  நவீனப்படுத்தப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியிலுள்ள சேனா பவனில்,  கடற்படை உயர் தளபதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின் போது, ''தற்போது நாட்டின் நிதிநிலை பெரும் சவாலாக இருக்கிறது. இது விரைவில் சீர்படுத்தப்பட்டு பொருளாதாரம் மேம்படுத்தப்படும். கடலோர பாதுகாப்பு படையில் நடக்கும் விபத்துக்குள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு படைகளுக்கு தேவையான வசதிகளை அவசரகால அடிப்படையில் செய்து முடிக்க நரேந்திர மோடி அரசு வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, வரவிருக்கின்ற பட்ஜெட்டில் பாதுகாப்பு துறையை நவீனப்படுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன் மூலம் செலவீனங்களை அதிகரித்து, பாதுகாப்பு துறைக்காகன தேவைகள் நிறைவேற்றப்படும். மேலும், இந்தத் துறைக்கு தேவையான ஆயுதங்களும் கொள்முதல் செய்யப்படும்'' என்றார்.