Published:Updated:

தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!

தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!
தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!
தே.மு.தி.க நிர்வாகிகள், தொண்டர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை!

சென்னை: தே.மு.திக சார்பில் "உங்களுடன் நான்" என்ற நிகழ்ச்சியின் மூலம் வரும் 26ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் நேரில் சந்தித்து கலந்தாலோசனை நடத்துகிறார்.

தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அந்தந்த மாவட்டத்தை சார்ந்த கழக அணி நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என தேமுதிக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

கூட்டத்திற்கு வரும் பொழுது கண்டிப்பாக தலைமை கழகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள உறுப்பினர் அடையாள அட்டையையும், தங்களுடைய மாவட்ட கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி அட்டையையும் கொண்டு வர வேண்டும். மேற்படி, அட்டைகளுடன் வருபவர்கள் மட்டுமே  கட்டாயம் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் 26ஆம் தேதி கோவை மாநகர், வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளும், 27ஆம் தேதி திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளும், 28ஆம் தேதி கரூர் மாவட்ட நிர்வாகிகளும், 29ஆம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளும், 30ஆம் தேதி சேலம் மாநகர், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி தர்மபுரி மாவட்ட நிர்வாகிகளும், 2ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளும், 3ஆம் தேதி வேலூர் மத்தியம், கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், 4ஆம் தேதி திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட துணை செயலாளர் உள்பட 2 பேர் நீக்கம்

இதனிடையே, தே.மு.தி.க நெல்லை மாவட்ட துணை செயலாளராக செயல்பட்டு வந்த எஸ்.ஜெயச்சந்திரன் மற்றும் தி்ண்டுக்கல் மேற்கு மாவட்டம், பழனி நகர செயலாளராக செயல்பட்டு வந்த டி.வெங்கடசுப்பிரமணி ஆகியோர் இன்று முதல் கட்சி பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்று அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.