Published:Updated:

சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.5 உயர்த்துகிறது மத்திய அரசு!

விகடன் விமர்சனக்குழு
சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.5 உயர்த்துகிறது மத்திய அரசு!
சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.5 உயர்த்துகிறது மத்திய அரசு!
சிலிண்டர் விலையை மாதம்தோறும் ரூ.5 உயர்த்துகிறது மத்திய அரசு!

புதுடெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம்தோறும் 5 ரூபாய் உயர்த்த மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் மண்எண்ணெய்க்கு 80 ஆயிரம் கோடி மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

இதனிடையே, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதம் தோறும் 5 ரூபாயும், மண்எண்ணெய் விலையை மாதம் தோறும் 50 காசு முதல் ஒரு ரூபாய் வரை உயர்த்தவும் மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மானியத்தை ரத்து செய்யும் நோக்கில் மாதம்தோறும் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாதம் தோறும் 5 ரூபாய் உயர்ந்தால் சமையல் எரிவாயுக்கான மானியம் 7 ஆண்டுகளில் ரத்தாகும்.

ஏற்கனவே, டீசல் விலை மாதம்தோறும் 50 காசுகள் உயர்த்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.