Published:Updated:

அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்!

அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்!
அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்!
அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைக்கிறார்!

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 இடங்களில், குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் அம்மா மருந்தகங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் அம்மா உணவகங்களை அரசு தொடங்கியுள்ளது. குறைந்த விலையில் தரமான உணவை வழங்கும் இந்த உணவகங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அம்மா குடிநீர், அம்மா உப்பு ஆகியவை இடம் பிடித்துள்ளன.

இந்நிலையில் மக்களுக்குத் தேவையான மருந்துகளை மலிவான விலையில் வழங்குவதற்காக, தமிழகத்தில் குறைந்தவிலையில் 100 இடங்களில் அம்மா மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஒரு கோடி ரூபாய் செலவில், 10 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா இந்த மருந்தகங்களை தொடங்கி வைக்கிறார்.