Published:Updated:

விலைவாசி உயர்வை தடுக்க மோடி நடவடிக்கை எடுக்கவில்லை: சரத்பவார் குற்றச்சாட்டு!

விலைவாசி உயர்வை தடுக்க மோடி நடவடிக்கை எடுக்கவில்லை: சரத்பவார் குற்றச்சாட்டு!
விலைவாசி உயர்வை தடுக்க மோடி நடவடிக்கை எடுக்கவில்லை: சரத்பவார் குற்றச்சாட்டு!
விலைவாசி உயர்வை தடுக்க மோடி நடவடிக்கை எடுக்கவில்லை: சரத்பவார் குற்றச்சாட்டு!

மும்பை: விலைவாசி உயர்வை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று சரத்பவார் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி சரத்பவார் பேசும்போது, ''தேர்தலுக்கு முன்பு விலைவாசி பிரச்னையில் மத்திய அரசு மீது நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ் அரசு விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, விலைவாசி உயர்வு பிரச்னையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது, விலைவாசி உயர்வு பிரச்னையை எதிர்கொள்ளும் பொறுப்பு நரேந்திர மோடியிடம் உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்த கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று கூறி, அவர் விலைவாசி உயர்வு பிரச்னையில் தனது பொறுப்பை தட்டி கழித்து தப்பிக்க முடியாது.

ரயிலில் சரக்கு கட்டணம் 6.5 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இது அத்தியாவசிய பொருட்கள் மீதான விலைவாசி உயர்வை இன்னும் அதிகமாக்கும். இந்த பிரச்னையை மத்திய அரசு எப்படி கையாள போகிறது என்பதை பார்க்க வேண்டும். தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக முக்கிய பங்கை வகித்து மத்திய அரசின் செயல்பாட்டை கண்காணிக்கும்.

பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை அரசு முழுமையாக திரும்ப பெறவில்லை. மின்சார ரயிலில் 80 கிலோ மீட்டர் தூரம் வரையிலான கட்டண உயர்வை மட்டுமே ரத்து செய்துள்ளது. இந்த ஆண்டு மழையளவு குறைவாகத்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டு இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது" என்று பேசினார்.