Published:Updated:

463 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!

463 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!
463 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 94 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பிலான 463 புதிய பேருந்துகள், 39 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் மலைப்பிரதேசங்களுக்கான 7 சிற்றுந்துகளை கொடியசைத்து முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
 

463 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!

மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் 87 பேருந்துகள்; விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 109 பேருந்துகள்; சேலம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 34 பேருந்துகள்; கோயம்புத்தூர் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 61 பேருந்துகள்; கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 109 பேருந்துகள்; மதுரை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 46 பேருந்துகள்; திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 17 பேருந்துகள் என 91 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 463 புதிய பேருந்துகள் மற்றும் 2 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட 39 பேருந்துகள்;
 

463 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா!

மலைப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு விரைவாக எளிதில் சென்று திரும்பும் வகையில் சிற்றுந்துகள் சேவையை புதியதாக ஏற்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, விழுப்புரம் கோட்டத்திற்கு 1 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 7 சிற்றுந்து சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மொத்தம் 502 பேருந்துகள் மற்றும் 7 சிற்றுந்துகளை துவக்கி வைப்பதன் அடையாளமாக முதலமைச்சர் இன்று தலைமைச் செயலகத்தில் 7 ஓட்டுநர்களுக்கு பேருந்துகளுக்கான சாவிகளை வழங்கி, கொடியசைத்து பேருந்து மற்றும் சிற்றுந்து சேவைகளை துவக்கி வைத்தார்.