Published:Updated:

பதுக்கலை தடுக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

பதுக்கலை தடுக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்
பதுக்கலை தடுக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: உணவுப்பொருள் பதுக்கல் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க மாநில அரசுகள், சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
 

பதுக்கலை தடுக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

டெல்லியில் வேளாண்துறை, நீர்வளத்துறை, உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள், அமைச்சரவைச் செயலாளர், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய மோடி, பருவமழை தாமதம் குறித்து விளக்கிய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், இன்னும் இரு மாதங்களில் பருவமழை வலுவடையும் என தெரிவித்தனர்.

மேலும், விவசாய சாகுபடிக்கு தேவையான நீர் இருப்பு, விதைகள் மற்றும் மின்சார விநியோகம் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்த பிரதமர், மழைநீர் சேகரிப்பு முறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் உள்ள உணவுப்பொருட்கள் கையிருப்பு குறித்து வேளாண் மற்றும் உணவு வழங்கல்துறை அதிகாரிகளிடம் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

உணவுப்பொருள் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசுடன் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்ட நரேந்திர மோடி, பருவமழைக்கான செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.