Published:Updated:

தேச நலன் கருதியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது: மோடி

தேச நலன் கருதியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது: மோடி
தேச நலன் கருதியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது: மோடி
தேச நலன் கருதியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது: மோடி

புதுடெல்லி: கடந்த ஒரு மாதத்தில் தேச நலன் கருதியே அனைத்து முடிவுகளையும் அரசு எடுத்துள்ளது என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. இதையடுத்து கடந்த மாதம் (மே) 26ஆம் தேதி நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், தனது தலைமையிலான அரசு பதவியேற்று ஒரு மாதம் முடிவடைந்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் வலைதளத்தில், ''கடந்த ஒரு மாதத்தில் தேச நலன் கருதியே அனைத்து முடிவுகளையும் அரசு எடுத்துள்ளது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 100 மணி நேரத்திற்குள்ளேயே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. நாங்கள் தேசத்திற்காக உழைப்பதால் அந்தக் குற்றச்சாட்டுகளை கண்டுக்கொள்ளவில்லை.

நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்காக மாநில முதல்வர்களுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்'' என கருத்து தெரிவித்துள்ளார்.