Published:Updated:

குஷ்பு: இன்னொரு ஜெ..?

குஷ்பு: இன்னொரு ஜெ..?

அன்று ஜெயலலிதாவுக்கு என்ன நடந்ததோ, அதுதான் இன்று குஷ்புக்கு நடக்கிறது. நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.சோமசுந்தரம் என எத்தனையோ சீனியர்கள் இருந்தாலும் ஜெயலலிதாவுக்குத்தான் அதிகமான முக்கியத்துவத்தை எம்.ஜி.ஆர். கொடுத்தார். இது மூத்தவர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. ஜெயலலிதாவைப் பற்றி தவறான தகவல்களைச் சொல்லி எம்.ஜி.ஆரிடம் இருந்து பிரிக்கும் காரியங்களைப் பலரும் பார்த்தார்கள். எம்.ஜி.ஆரின் திடீர் மறைவுக்குப் பிறகும் ஜெயலலிதா, இந்த சீனியர்களால் உதாசீனப்படுத்தப்பட்டார். அதன் பிறகு தொண்டர்கள் செல்வாக்கு காரணமாக, கட்சியும் தலைமைக் கழகமும் அவரிடமே வந்து சேர்ந்தது. இதெல்லாம் பழைய வரலாறு!

குஷ்பு: இன்னொரு ஜெ..?

இன்றைக்கு குஷ்புக்கு நடக்கும் காரியங்கள் அதனைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. ஜெயலலிதாவின் ஆதரவாளராகவும் ஜெயா டி.வி-யின் முகமாகவும் கருதப்பட்ட குஷ்பு, திடீரென தி.மு.க. வட்டாரத்துக்கு

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குஷ்பு: இன்னொரு ஜெ..?

வந்தது கருணாநிதிக்கு உடனடி உற்சாகத்தை மட்டுமல்ல, நிரந்தர மகிழ்ச்சியையும் கொடுத்தது. அவரது வருகையைக் கனிமொழி நீங்கலாக, அனைவருமே வரவேற்றார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நாகர்கோவிலில் நடந்த முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் நீங்கலாக மேடையில் உட்காரவைக்கப்பட்டவர் குஷ்பு மட்டும்தான். அப்போது அதனை ஸ்டாலினுமே மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான் செய்து கொடுத்தார்.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னைத் தொகுதியில் எம்.பி.ஆக வேண்டும் என்ற ஆசை குஷ்புக்கு வந்தது. அதனைக் கருணாநிதியிடம் சொன்னார். அவரும் தலை அசைத் தார். இந்த விஷயம் ஸ்டாலினுக்கும் சொல்லப்பட்டது. அவரும் தடை போடவில்லை. ஆனால் விஷயம் லேசாக, அவரது குடும்பத்தினர் காதுக்குப் போனது. 'தேவையில்லாமல் ஒருவரை வளர்த்துவிட்டு பிறகு கஷ்டப்படப் போகிறீர்கள்’ என்று முதலில் எச்சரித்தது ஸ்டாலின் மனைவி துர்கா. இதனை ஸ்டாலினின் சகோதரி செல்வியும் சொன்னதாகச் சொல்கிறார்கள். குஷ்பு வருகையைக் கனிமொழி ஆரம்பத்தில் இருந்தே விரும்பவில்லை. அவரும் இவர்கள் கருத்தையே வழிமொழிந்தார். இவர்கள் மூவருமே இதனைக் கருணாநிதியிடம் சொல்லப் பயந்தார்கள். ஸ்டாலினிடம் சொன்னார்கள். ''அப்பா மன வருத்தம் அடையுற மாதிரி எதையும் சொல்லாதீங்க'' என்று இரண்டு மாதங்களுக்கு முன் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். அத்துடன் விஷயம் அடங்கியது. இவர்களுக்குள் இப்படிப்பட்ட விவாதங்கள் நடப்பது தெரிந்ததும் குஷ்புவைச் சந்திப்பதை கருணாநிதி கொஞ்சம் குறைத்துக் கொண்டார். தன்னைப் புறக்கணிக்கிறார்கள் என்பதை அதன்பிறகு குஷ்பு உணர ஆரம்பித்தார். இந்த நிலைமையில்தான் பேட்டி, செருப்பு வீச்சு, தலைமைக் கழக அறிக்கை ஆகியவை தொடர்ச்சியாக நடந்தன. 'குஷ்புவைத் தி.மு.க.வில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது’ என்று தி.மு.க தலைமைக் கழகமே அறிவித்ததுதான் அதிர்ச்சியின் உச்சகட்டம். இந்த வார்த்தைகளைக் குஷ்பு சொல்லி இருக்கவேண்டும்.

''நான் தவறாக எதனையும் சொல்லவில்லை. தி.மு.க. ஜனநாயக இயக்கம்தான் என்பதை என்னுடைய பாணியில் சொன்னேன். அதனை யாராவது தவறாகப் புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. ஆனால் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நீங்கள்தான் துடைக்க வேண்டும்'' என்று கருணாநிதியிடம் குஷ்பு சொல்லி இருக்கிறார். ''இவர்களுக்காகப் பயந்துகொண்டு நான் ஓடிவிட மாட்டேன்'' என்றும் குஷ்பு சொல்லி வருகிறாராம். 1984 கால கட்டத்தில் ஜெயலலிதா அடிக்கடி உச்சரித்த வார்த்தை இது. ஒருவிதமான புறக்கணிப்பும் அவமானமும்தான் ஜெயலலிதாவை வளர்த்தது. குஷ்புவும் வளர்வாரா?

- முகுந்த்