Published:Updated:

மோடியின் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Vikatan Correspondent
மோடியின் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
மோடியின் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
மோடியின் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

அலகாபாத்: நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி பெற்ற வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ''உச்ச நீதிமன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், தனது மனைவியின் வருமான விவரங்கள் மற்றும் பான் கார்டு குறித்த தகவல்களை நரேந்திர மோடி அளிக்கவில்லை.

மோடியின் பிரசாரத்திற்காக கோடிக்கான ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா தலைவர்கள் பலர் வாரணாசியில் நீண்ட நாட்கள் சொகுசு விடுதிகளில் தங்கி தேர்தல் பணிகளை செய்துள்ளனர். மோடியின் பெயர் மற்றும் உருவம் பதித்த பனியன்கள், தொப்பிகள் விநியோகிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.