Published:Updated:

மார்க்சிஸ்ட் பெண்களை பலாத்காரத்திற்கு தூண்டுவேன் என மம்தா கட்சி எம்.பி. மிரட்டல்!

Vikatan Correspondent
மார்க்சிஸ்ட் பெண்களை பலாத்காரத்திற்கு தூண்டுவேன் என மம்தா கட்சி எம்.பி. மிரட்டல்!
மார்க்சிஸ்ட் பெண்களை பலாத்காரத்திற்கு தூண்டுவேன் என மம்தா கட்சி எம்.பி. மிரட்டல்!
மார்க்சிஸ்ட் பெண்களை பலாத்காரத்திற்கு தூண்டுவேன் என மம்தா கட்சி எம்.பி. மிரட்டல்!

புதுடெல்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்குவோம் என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. பேசி உள்ளதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் கட்சித் தொண்டர்களிடையே பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தபஸ் பால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரை தாக்கினால், அவர்களை சுட்டுத் தள்ளுவோம் என ஆவேசமாகக் கூறினார்.

தேவைப்பட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும்படி தனது கட்சியினரை கேட்டுக்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டார். தைரியம் இருந்தால் தன்னைக் கட்டுப்படுத்திப் பார்க்கட்டும் என்றும் தபஸ் பால் சவால் விடுத்தார்.

இந்நிலையில் தபஸ் பாலின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தபஸ் பால் மீது, நாடாளுமன்ற சபாநாயகர் தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. முகம்மது சலிம் வலியுறுத்தியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கடந்த மூன்று ஆண்டுகளாகவே இவ்வாறு பேசி வருவதாக மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா வன்மையாக கண்டித்துள்ளது.

இதனிடையே, சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக 48 மணி நேரத்திற்குள் விளக்கமளிக்கும்படி தபஸ் பாலை, அவர் சார்ந்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சி அறிவுறுத்தியுள்ளது. தபஸ் பாலின் கருத்து உணர்வற்றது என்றும், இதனை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆதரிக்காது எனவும் அக்கட்சியின் மூத்த தலைவரான டெரக் ஒ பிரியன் தெரிவித்துள்ளார்.