Published:Updated:

தமிழருவி மணியன் ஆபாசமாக திட்டுவதாக தே.மு.தி.க எம்.எல்.ஏ புகார்!

Vikatan Correspondent
தமிழருவி மணியன் ஆபாசமாக திட்டுவதாக தே.மு.தி.க எம்.எல்.ஏ புகார்!
தமிழருவி மணியன் ஆபாசமாக திட்டுவதாக தே.மு.தி.க எம்.எல்.ஏ புகார்!
தமிழருவி மணியன் ஆபாசமாக திட்டுவதாக தே.மு.தி.க எம்.எல்.ஏ புகார்!

நாமக்கல்: காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன்,  செல்போனில் மிரட்டல் விடுப்பதோடு, ஆபாசமாக திட்டுவதாக தே.மு.தி.க எம்.எல்.ஏ காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம் தொகுதி தே.மு.தி.க எம்.எல்.ஏ.வான பார்த்தசாரதி, கடந்த 28ஆம் தேதி நாமக்கல்லுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்துடன்  வந்திருந்தார். அப்போது, எம்.எல்.ஏ பார்த்தசாரதி, காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியனை செல்போனில் அழைத்து, விஜயகாந்த் பற்றி தரக்குறைவாக பேட்டி கொடுத்ததற்கு கண்டனம் தெரிவித்தார். இதில், இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, எம்.எல்.ஏ பார்த்தசாரதி கொலை மிரட்டல் விடுப்பதாக தமிழருவி  மணியன் திருப்பூர் காவல்துறையில் அன்று இரவே புகார்  செய்துள்ளார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ பார்த்தசாரதி நாமக்கல் காவல்நிலையத்தில்  புகார் அளித்துள்ளார். அதில், தமிழருவி மணியனிடம் செல்போனில்  பேசிய போது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன்  மிரட்டல் விடுத்தார். அதன் பின் காந்திய மக்கள் கட்சியை சேர்ந்த சதீஸ் என்பவர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டுகிறார். எனவே  இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.