Published:Updated:

மோடி சிறந்தவர்: அமர்த்தியா சென் திடீர் பாராட்டு!

மோடி சிறந்தவர்: அமர்த்தியா சென் திடீர் பாராட்டு!
மோடி சிறந்தவர்: அமர்த்தியா சென் திடீர் பாராட்டு!

மோடி சிறந்தவர்: அமர்த்தியா சென் திடீர் பாராட்டு!

மோடி சிறந்தவர்: அமர்த்தியா சென் திடீர் பாராட்டு!
மோடி சிறந்தவர்: அமர்த்தியா சென் திடீர் பாராட்டு!

லண்டன்: நிர்வாக ரீதியாக என்னென்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்பதை நரேந்திர மோடி தெளிவாக தெரிந்து கொள்கிறார். அந்த வகையில் அவர் சிறந்தவர் என்று பொருளாதார மேதை அமர்த்தியா சென் திடீரென பாராட்டியுள்ளார்.

நீண்ட நாட்களாகவே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து வந்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்தியா சென், தற்போது நரேந்திர மோடி மீதான தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்.

வரும் 10 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில்,  நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கருத்து தெரிவித்துள்ள அமர்த்தியா சென்,"மோடி பிரதமரான பிறகு நான் இந்தியாவிற்கு வரவேயில்லை. ஆனால், நிர்வாக ரீதியாக அவர் என்னென்ன சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்கிறார். அந்த வகையில், மோடி சிறந்தவர்.

தேர்தலில் மோடி வெற்றி பெற்று பிரதமராவதில் எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஆனால், அவர் வெற்றி பெற்று பிரதமராகிவிட்டார். ஒரு ஜனநாயக இந்திய குடிமகன் என்ற முறையில் மோடியை மதச்சார்பற்ற ஆட்சி நடத்த அனுமதிப்பதில் எனக்கு மகிழ்ச்சி. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை ஒரு பொருட்டே அல்ல. ஆனால், ஆசிய நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய இந்தியாவின் தோல்விக்கான அடிப்படை காரணங்கள் புதிய அரசின் அஜெண்டாவில் இருக்கும்.

அதேபோல், இந்த பட்ஜெட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படுமா? என்பதும் கேள்விக்குறிதான். இந்தியா ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக நாடு. அனைத்து மக்களுக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு