Published:Updated:

திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

 திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!
திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

ணர்ச்சி வசப்பட்டு ஒருவர் செய்யும் கொலை சமூகத்தையோ, சட்டம் ஒழுங்கையோ பெரிதாக அச்சுறுத்துவது இல்லை. அதுவே, திட்டமிடப்பட்டு, கூலிப்படைகளை ஏவிவிட்டு செய்யும் போது சமூகத்தில் தவிர்க்கமுடியாத அச்சத்தை ஏற்படுத்திவிடுகின்றது.

பழிக்குப்பழி கொலைகளில் பெயர் போனது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் நடந்த பெரும்பாலான கொலைகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் அரங்கேறியவை. அமைதியாக மக்கள் சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் போது, தங்கள் கண் எதிரே ஒருவர் வெட்டி சாய்க்கப்படுகின்றார். இதை பார்த்து, அவிழ்த்துவிட்ட மூட்டையிலிருந்து தெறித்து ஓடும் நெல்லிக்கனியை போல ஓடும் அப்பாவி மக்களின் மனநிலை எப்படியிருக்கும்? கட்டுப்படுத்த முடியாமல் கொலைகள் தொடரும் போது தன் நிழலை கூட சந்தேகப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர் உள்ளாட்சி பிரமுகர்கள்.
 

 திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

2012ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து இதுவரை செங்கல்பட்டு நகராட்சி துணைத்தலைவர் ரவிப்பிரகாஷ் (திமுக), செங்கல்பட்டு  கவுன்சிலர் சுரேஷ் (தே.மு.தி.க), தே.மு.தி.க மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மண்ணிவாக்கம் ஊராட்சி தலைவர் புருஷோத்தமன் (அ.தி.மு.க), மறைமலைநகர் ஒன்றிய கவுன்சிலர் வேலு (அ.தி.மு.க), பி.வி. களத்தூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் (தி.மு.க), ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய தலைவர் பிபிஜி குமரன் (அ.தி.மு.க), சேத்துப்பட்டு ஊராட்சி தலைவர் சங்கர்(தி.மு.க), பிவி களத்தூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குப்பன்(அ.தி.மு.க), பிவி களத்தூர் ஒன்றிய இளம் பாசறை தலைவர் நித்யானந்தம் (அ.தி.மு.க), காஞ்சிபுரம் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட துணைச்செயலாளர் நாராயணன், காரணை புதுச்சேரி முன்னாள் தலைவர் சம்பத் (ம.தி.மு.க), திருமணி முன்னாள் தலைவர் ராஜகோபால்(அ.தி.மு.க), ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் ஆகிய அரசியல் புள்ளிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கூலிப்படைகளால் ரத்தமும் சதையுமாக சிதைக்கப்பட்ட இவர்கள் அனைவரும் பழிக்குப்பழி வாங்கப்பட்டவர்கள்.
 

 திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

குவியும் கூலிப்படை

மதுரை, தூத்துக்குடி போன்ற ஏரியாக்களில் இருந்து வரும் கூலிப்படையினர்தான் பெரும்பாலான அரசியல் கொலைகளை செய்கின்றனர். 30 விநாடிகளில் அரங்கேறும் இந்த கொலைகளுக்கு, நோட்டமிட ஆகப்பட்ட காலம் 30 நாட்களாகவோ, மூன்று மாத காலமாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் நோட்டமிடுவதில் தொடங்கி, கொலையை முடிக்கும் வரை காவல்துறை கண்ணில் சிக்குவதில்லை. சம்பவத்தில் நேரடியாக எத்தனை பேர் ஈடுபடுகி்ன்றார்களோ அதற்கு ஈடாக ஆட்களை விழுப்புரம், கடலூர், எழும்பூர், திருவள்ளூர் போன்ற ஏதாவது வெளிமாவட்ட நீதிமன்றங்களில் சரண் அடைய செய்வார்கள். வழக்கும் வழுவழுக்கும் நிலையில் இவர்கள் ஜாமீனில் வெளிவந்தால் ஏரியா மீண்டும் பரபரப்பு ஆகிவிடும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளில் சிக்கிய குற்றவாளிகளில் பெரும்பாலானோர் ஜாமீனில் வெளிவந்துள்ளதால், ஏரியா மீண்டும் பதட்டத்துடன் காணப்படுகின்றது.

 திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

அச்சுறுத்தும் சட்டம் ஒழுங்கு

"சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய ரவுடிகள் மற்றும் கூலிப்படைகளுக்கு சென்னை மாநகர காவல்துறை நெருக்கடி கொடுத்து வருகின்றது. இதனால் அவர்கள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை இங்குள்ள லோக்கல் தாதாக்கள் அசைன்மென்ட்களை கொடுத்து செய்ய சொல்கிறார்கள். இதனால் அவர்கள் வேறுவழியின்றி  உள்ளூர் தாதாக்களோடு இணைந்து செயல்பட தொடங்கிவிட்டனர். எங்கள் கட்சியில் இருந்து ஒருவருக்கு குறிவைக்கப்பட்டுள்ளதாக முக்கியமான நபர்களிடம் இருந்து தகவல் வந்திருக்கின்றது. காவல்துறை இப்போதே விழிப்போடு செயல்பட்டால்தான் கொலைகளை தவிர்க்க முடியும்" என்கிறார் காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க செயலாளர் மல்லை சத்யா.

 திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

செங்கல்பட்டு தே.மு.தி.க எம்.எல்.ஏ அனகை. முருகேசன், "முதல் வருட மானியக் கோரிக்கையின் போதே செங்கல்பட்டு நகரம் கொலைநகரமாக இருக்கின்றது. மக்கள் வெளிவரவே அச்சமாக இருக்கின்றனர். அரசியல் கொலைகள் அதிகமாக இந்தப் பகுதியில்தான் நடக்கிறது. காவல்துறையினர் சரியாக நடவடிக்கை எடுப்பதில்லை. போலி குற்றவாளிகள் நீதிமன்றங்களில் சரண் அடைகின்றார்களே தவிர, காவல்துறையினர் நேரடியாக இதுவரை குற்றவாளிகளை பிடித்ததில்லை. காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல்துறை தலைமையகம் செயல்படுவதை போன்று, செங்கல்பட்டிலும் காவல்துறை அதிகாரியை கொண்டு ஒரு அலுவலகம் செயல்பட வேண்டும். அதுபோல் குற்றப்பின்னணியில் உள்ளவர்கள்தான் பெரும்பாலும் உள்ளாட்சி பிரமுகர்களாக இருக்கின்றனர். ரியல் எஸ்டேட் தகராறு, மணல் எடுப்பது, கட்டுமானப்பணி இப்படி ஏதாவது ஒன்றுதான் கொலைகளுக்கான பின்னணியாக இருக்கிறது. குற்றப் பின்னணி கொண்டவர்கள் அரசியலுக்கு வருவதை தடுக்க வேண்டும். காவல்துறையின் மெத்தனத்தால் கொலைகள் அதிகரிக்கின்றதே தவிர குறைவதில்லை" என்கிறார்.

உளவுத்துறை செய்வது என்ன?

இதுவரை நடந்த கொலைகளில் பெரும்பாலான கொலைகள் உளவுத்துறைக்கு தெரிந்ததுதான். ஒரு சில அதிகாரிகள் தங்கள் கொலைசெய்யப்படும் நபருக்கு யார் மூலம் அச்சுறுத்தல் இருக்கின்றது என எச்சரித்து அவர்களிடம் இருந்து பெரும் தொகையை கறந்து விடுகிறார்கள். இருதரப்பினரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது காவல்நிலையங்களில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சரியான காரணத்தை உளவுத்துறை மேலிடங்களுக்கு தெரிவிப்பதில்லை.

காவல்துறைக்கு கரும்புள்ளி

சூணாம்பேடு பகுதியை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையின் கரும்புள்ளி எனலாம். ஒரே பிரிவை சேர்ந்த இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு பிரிவுகளிலும் உள்ள மக்கள் ஊரை காலி செய்துவிட்டு கிளம்பிவிட்டனர். ஒரு பகுதியினர் சென்னையிலும், ஒரு பகுதியினர் பாண்டிச்சேரியிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். சேதமடைந்த வீடுகளும், பாதுகாப்பு இல்லாத உறவினர்களையும் யாருக்கும் தெரியாமல் வந்து பார்க்கும் நிலை இன்றும் உள்ளது. அதுபோல் காஞ்சிபுரம் சாராய வியாபாரியும், பிரபல தாதாவுமான ஸ்ரீதர், தற்போது துபாயில் இருக்கிறார். அவரை இன்னும் கைது செய்யாமல் இருப்பதும் காஞ்சி காவல்துறைக்கு ஒரு கறைதான்.

அடுத்த லிஸ்ட் ரெடி

செங்கல்பட்டு ராஜகோபாலின் மகன் செந்தில்குமார், ஆலப்பாக்கம் தலைவர் சல்குரு, மதுராந்தகம் எம்.எல்.ஏ கனிதாவின் கணவர் சம்பத், மறைமலைநகர் நகராட்சி தலைவர் கோபிகண்ணன், திருமணி தலைவர் ஆறுமுகம் என அரசியல் புள்ளிகளும், பிவி களத்தூர் சுரேஷ், வல்லம் பூபதி, பட்டரவாக்கம் சிவா போன்ற ரவுடிகளும் அச்சுறுத்தலை சமாளிக்க முடியாமல் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

 திகில் காஞ்சி: மிரட்டும் கூலிப்படை...மிரளும் உள்ளாட்சி பிரமுகர்கள்!

என்ன செய்யப்போகின்றது காவல்துறை?
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் கேட்டபோது, "பெரும்பாலான குற்றவாளிகள் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்கள். வல்லம் பூபதி மட்டும் சில நாட்களுக்கு முன் குண்டர் சட்டத்திலிருந்து வெளிவந்திருக்கிறான். அவனுடைய செயல்பாடுகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். பொதுவாக ஏரியா அமைதியாகத்தான் இருக்கிறது. ஸ்ரீதர் துபாயில் இருப்பதால் அவன் தற்போது வெளியே வரமுடியாது.

ஸ்ரீதரை கைது செய்யும் விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய வெளியுறவுத்துறை, இந்திய வெளியுறவுத்துறையிலிருந்து துபாய் வெளியுறவுத்துறை என இரண்டு அரசுகளும் சேர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஸ்ரீதரை கைது செய்ய அரசிடம் இருந்து உத்தரவு வந்ததும் கைது செய்துவிடுவோம்" என்கிறார்.

காவல்துறை சொல்வதை செயலில் காட்டினால் நல்லது!

- பா.ஜெயவேல்

 

அடுத்த கட்டுரைக்கு