Published:Updated:

கட்டட விபத்து குறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின்

கட்டட விபத்து குறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின்
கட்டட விபத்து குறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: 11 மாடி கட்டட விபத்து தொடர்பாக தமிழக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

கட்டட விபத்து குறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும்: ஸ்டாலின்

போரூரை அடுத்த முகலிவாக்கத்தில் 11 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகளை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், 11 மாடி கட்டட விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை விரைந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கட்டடம் அனுமதி தொடர்பாக ஊடகங்களின் கேள்விக்கு அரசின் பதில் தேவை என்றும், கட்டட விபத்து தொடர்பாக அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், விதிமீறல் கட்டடங்கள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.