Published:Updated:

பா.ஜனதாவை வேவு பார்த்த அமெரிக்க உளவு நிறுவனம்; பரபரப்பு தகவல்கள்!

Vikatan Correspondent
பா.ஜனதாவை வேவு பார்த்த அமெரிக்க உளவு நிறுவனம்; பரபரப்பு தகவல்கள்!
பா.ஜனதாவை வேவு பார்த்த அமெரிக்க உளவு நிறுவனம்; பரபரப்பு தகவல்கள்!
பா.ஜனதாவை வேவு பார்த்த அமெரிக்க உளவு நிறுவனம்; பரபரப்பு தகவல்கள்!

வாஷிங்டன்/புதுடெல்லி: இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியான பா.ஜனதா உள்ளிட்ட 6 வெளிநாட்டு கட்சிகளையும், 193 நாட்டு அரசாங்கங்களையும் அமெரிக்க உளவு நிறுவனமான என்.எஸ்.ஏ. வேவு பார்க்க அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவின் முன்னணி உளவு ஏஜென்சியான என்.எஸ்.ஏ. ( National security Agency- NSA) எனப்படும் தேசிய பாதுகாப்பு முகமைக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு இதற்கான அனுமதியை அமெரிக்க நீதிமன்றம் வழங்கி உள்ளது.

இந்த உளவு பட்டியலில் பா.ஜனதா மட்டுமல்லாது, பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சி,  எகிப்து நாட்டின் 2 கட்சிகள், லெபனான் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒரு கட்சிகளையும் வேவு பார்க்க அனுமதி வழங்கப்பட்டதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கான ஆதாரங்களை என்.எஸ்.ஏ.வின் முன்னாள் உளவாளியும், அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டவருமான எட்வர்டு ஸ்னோடன் அளித்துள்ளதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

2010 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மேற்கூறிய உத்தரவை புதுப்பித்து,  என்.எஸ்.ஏ. உளவு

பா.ஜனதாவை வேவு பார்த்த அமெரிக்க உளவு நிறுவனம்; பரபரப்பு தகவல்கள்!

பார்க்க அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்து வந்ததாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு நாடுகளை தவிர, உலகின் 193 நாடுகளின் அரசாங்கத்தினுள்ளும் ஊடுருவி உளவு பார்க்க என்.எஸ்.ஏ.வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம்( ஐஎம்எப்), ஐரோப்பிய யூனியன், சர்வதேச அணுசக்தி முகமை போன்ற பன்னாட்டு அமைப்புகளையும் அமெரிக்க உளவு நிறுவனம் வேவு பார்க்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவை, குறிப்பாக பா.ஜனதாவை உளவு பார்த்தது குறித்து என்.எஸ்.ஏ. செய்தி தொடர்பாளரிடம் இந்திய செய்தி நிறுவனம் ஒன்று கேட்டபோது, அமெரிக்க அதிபர், தேசிய புலனாய்வு இயக்குனர் ஆகியோருக்கான தேவைகள் மற்றும் புலனாய்வு துறைகள் மற்றும் ஏஜென்சிகளுக்கு தேவைப்படும் முக்கியமான தகவல்கள் ஆகியவற்றிக்காகவே வெளிநாட்டு உளவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்தார்.

இதனிடையே தங்கள் கட்சி அமெரிக்க உளவு நிறுவனத்தால் வேவு பார்க்கப்பட்டது குறித்து பா.ஜனதா தரப்பில் இன்னும் யாரும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.