Published:Updated:

பெண்களின் பாதுகாப்புக்கு குட்டை பாவாடை, குடிபழக்கம் கூடாது: அமைச்சர் அறிவுரை!

Vikatan Correspondent
பெண்களின் பாதுகாப்புக்கு குட்டை பாவாடை, குடிபழக்கம் கூடாது:  அமைச்சர் அறிவுரை!
பெண்களின் பாதுகாப்புக்கு குட்டை பாவாடை, குடிபழக்கம் கூடாது: அமைச்சர் அறிவுரை!
பெண்களின் பாதுகாப்புக்கு குட்டை பாவாடை, குடிபழக்கம் கூடாது:  அமைச்சர் அறிவுரை!

பனாஜி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குமாறு தமது கட்சியினருக்கு உத்தரவிடுவேன் என்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தபாஸ் பாலின் பேச்சு கிளப்பிய சர்ச்சை ஓய்வதற்குள், மற்றொரு அரசியல்வாதி பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறிய அறிவுரை அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

கோவா மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சுதின் தவாலிகர் இது தொடர்பாக தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பெண்கள் பாலியல் பலாத்கார நிகழ்வுகளிலிருந்து தங்களை காத்துக்கொள்ள குட்டையான ஆடைகளை அணிவதோ, மதுபான விடுதிகளுக்கு சென்று குடிக்கவோ கூடாது என அறிவுறுத்தி உள்ளார்.

" கோவாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து மதுபானம் அருந்தாதீர்கள். அது உடல் நலத்திற்கும் நல்லதல்ல. பப்பு(மதுபான விடுதிகள்) களை மூட வேண்டும். பெண்கள் குட்டையான ஆடைகளை அணிந்துகொண்டு பப்புகளுக்கு சென்று குடித்து கும்மாளமிடுகிறார்கள். இது நல்லதல்ல. பப்புகளுக்கு செல்வதும், குடிப்பதும் கோவா கலாச்சாரத்திற்கு எதிரானது.

எனது இந்த கருத்துக்களை கோவா முதலமைச்சர் மனோகர் பார்க்கரும் ஒப்புக்கொண்டுள்ளார். கோவா முழுவதும் மது அருந்துவதற்கும், பப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.

இளம்பெண்கள் குட்டையான ஆடைகளை அணிந்துகொண்டு பப்புகளுக்கு செல்வது நமது கலாச்சாரத்திற்கு பொருத்தமானது அல்ல. இதனை நாம் அனுமதித்தால் நமது கலாச்சாரம் என்னாவது? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்புக்கு குட்டை பாவாடை, குடிபழக்கம் கூடாது:  அமைச்சர் அறிவுரை!

இதுபோன்ற சமாச்சாரங்களை கர்நாடகா மாநிலத்தின் ஸ்ரீராம் சேனா தலைவர் முத்தாலிக் எதிர்ப்பதில் தவறில்லை. அவர் பப் கலாச்சாரத்திற்கு எதிரானவர்" என்றார்.

முத்தாலிக் காதலர் தின கொண்டாட்டங்களை எதிர்ப்பவர். மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டில் மங்களூரில் உள்ள பப்பினுள் புகுந்து, பெண்கள் இந்திய கலாச்சாரத்தை மீறுவதாக கூறி அதனை தமது ஆதரவாளர்களுடன் அடித்து நொறுக்கினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இவரது ஆதரவாளர்கள் காதலர் தின அட்டைகளை விற்கும் கடைகளை அடித்து நொறுக்குவதோடு, காதலர் தினத்தன்று ஜோடியாக திரியும் காதலர்களை பிடித்து கட்டாய திருமணமும் செய்துவைப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எதிர்ப்பு

இதற்கிடையே, அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி, அவருக்கு குட்டை ஆடைகளை அனுப்பி வைக்கப்போவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் துர்கதாஸ் காமத் கூறுகையில், ''பொதுப்பணித்துறை அமைச்சருக்கு குட்டை ஆடைகளை (மினி ஸ்கர்ட்) அனுப்பி வைக்க உள்ளோம். இதன் மூலம் ஒரு கலாச்சாரத்தை ஸ்கர்ட் எந்த வகையிலும் பாதிக்காது என்பதை நிரூபிக்க உள்ளோம்'' என்றார்.