Published:Updated:

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு!

Vikatan Correspondent
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு!
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு!
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் முழு அடைப்பு!

ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடியின் ஜம்மு-காஷ்மீர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் வரும் தினத்தில் முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வரும் 4ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்று ஒருநாள் முழு அடைப்பு நடத்த  அம்மாநில பிரிவினைவாத குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இதுகுறித்து மிர்வாய்ஸ் உமர் பரூக் தலைமையிலான மிதவாத ஹூரியத் அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ''மோடியின் வருகைக்கு எதிராக ஜூலை 4ஆம் தேதி முழு அடைப்பு நடத்த வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல் தெற்காசியாவில் அமைதி, வளம், வளர்ச்சியை நிறைவேற்ற முடியாது என்பதை வெளியுலகிற்கு தெரியப்படுத்த வேண்டும். காஷ்மீர் அரசியல் மற்றும் மனிதனின் பிரச்னையாகும். கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலம் இதில் இணைந்துள்ளது'' எனக் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி கூறுகையில், இதுவரை எப்போதும் இல்லாத வகையில் முழு அடைப்பு நடைபெற வேண்டும் எனக் கூறியுள்ளார். இதேபோல், மற்றொரு ஹூரியத் தலைவர் ஷபீர் அகமது ஷா, ஜே.கே.எல்.எப். தலைவர் முகமது யாசின் மாலிக் ஆகியோரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.