Published:Updated:

டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி!

புதுடெல்லி: இந்திய ஜனாதிபதிகளில் முதன்முறையாக பிரணாப் முகர்ஜி டுவிட்டர் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.

அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் என பலதரப்பினரும், சமூக வலைத்தளங்களில் தங்களை இணைத்துக்கொண்டு தகவல்களை பரிமாறி வருகின்றனர். அதேபோன்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று (1ஆம் தேதி) சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், @RashtrapatiBhvn என்ற பெயரில் கணக்கு தொடங்கியுள்ள அவர், இன்று மாலை 3 மணியளவில், ‘ராஷ்டிரபதி பவன் இப்போது டுவிட்டரில் இணைந்துள்ளது. வழக்கமான மேம்படுத்தலுக்கு எங்களை பின்பற்றவும்’ என்று முதல் தகவலை அனுப்பியிருக்கிறார். கணக்கு தொடங்கிய சில மணி நேரத்தில் 9 ஆயிரம் பேர் அவரை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து, இந்தியாவில் முதன்முறையாக டுவிட்டரில் இணைந்த ஜனாதிபதி என்ற பெயரை பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார். இதேபோல், பேஸ்புக்கிலும் இணைந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் பிரணாப் முகர்ஜி பெற்றுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு