Published:Updated:

மிஸ்டர் கழுகு: நீக்கு... நீக்காதே...

மிஸ்டர் கழுகு: நீக்கு... நீக்காதே...

மிஸ்டர் கழுகு: நீக்கு... நீக்காதே...

மிஸ்டர் கழுகு: நீக்கு... நீக்காதே...

Published:Updated:
மிஸ்டர் கழுகு: நீக்கு... நீக்காதே...
##~##

ழுகார் உள்ளே நுழையும்போது இந்த இதழுக்கான அட்டை தயாராகிக் கொண்டு இருந்தது. ''விஜயபாண்டியும் பிரபுவும் சரண் அடைகிறார்கள் என்றால், அடுத்து 'அட்டாக்’ பாண்டியும் சரண் அடையலாம்'' என்று ஆரம்பித்தார் கழுகார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அப்படியா சொல்கிறீர்?'' என்றோம்.

''அப்படிக்கூடச் செய்யலாம் அல்லவா? அதனால்தான் சொன்னேன். 'நமக்கும் போலீஸுக்கும் என்ன பகை? எதிரியை ஒழிச்சாச்சு... கொஞ்ச நாளைக்கு உள்ளே இருப்போமே?’ என்று இவர்கள் தரப்பில் பேசி வந்ததாகத் தகவல். அதனால்தான் உடனடியாக விஜயபாண்டியும் பிரபுவும் சரண் அடைந்துள்ளனர். இவர்களையும் போலீஸார் மென்மையாகத்தான் கவனிப்பார்களாம். அதை வைத்தே 'அட்டாக்’ சிக்கலாம் என்றும் சொல்கிறார்கள். காரணங்கள் அனைத்தையும் போலீஸ் கண்டுபிடித்து ​விட்டது. ஆள்தான் பாக்கி. தி.மு.க-வில் பொட்டு சுரேஷ் கை ஓங்கிய நேரத்தில், நிதி நிறுவன அதிபர் கடத்தல் வழக்கில் 'அட்டாக்’ பாண்டி சிக்கினார். நேரம் பார்த்து அவரைக் கட்சியில் இருந்து ஓரங்கட்ட வைத்தார் பொட்டு. 'அட்டாக்’கிடம் இருந்து 'மதிப்புமிக்க’ மண்டல வேளாண் விற்பனைக் குழு தலைவர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனால், பொட்டு மீது செம கடுப்பில் இருந்தது 'அட்டாக்’ தரப்பு. அந்த நேரத்தில்தான் கடந்த 24.2.10 அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து அருப்புக்​கோட்டைக்கு மூன்று எழுத்து டிராவல்ஸ் மூலம் அனுப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் 27 புல்லட்களும் அருப்புக்கோட்டை நகர் போலீஸில் சிக்கின. அந்தத் துப்பாக்கிகள் இரண்டும் அமெரிக்காவில் தயாரான 0.9 எம்.எம். ரக நவீன துப்பாக்கிகள். பொட்டுவைப் போட்டுத் தள்ளுவதற்காக வடமாநில கும்பலிடம் இருந்து 'அட்டாக்’ தரப்பு வாங்கிய துப்பாக்கிகள்தான் இவை என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள் ளதாம்.''

''அப்போதே இதைச் சொல்லி இருக்கிறீர்?''

''அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மீனா என்ற போலியான நபருக்கு அனுப்பப்பட்ட அந்தப் பார்சலை வாங்குவதற்காக வந்திருந்த வாகைக்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன், திருச்சுழி பண்ணை மூன்றடைப்பைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர், அன்றைய தினமே கைது செய்யப்பட்டனர். தென் மண்டல ஐ.ஜி-யின் உத்தரவின் பேரில் அன்றைய விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கிருஷ்ணமுர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது கைதான இருவரும் கை காட்டிய நபர்தான் இந்த விஜயபாண்டி. 'அட்டாக்’ பாண்டியின் அக்கா மகனான இவர், அப்போது அருப்புக்கோட்டையில் தயா மியூசிகல்ஸ் என்ற பெயரில் சி.டி. கடை நடத்தி வந்தார். அடுத்ததாக 'அட்டாக்’ பாண்டியை நோக்கி முன்னேறினர் போலீஸார். ஆனால், இடையில் என்ன நடந்ததோ, தெரியவில்லை. அந்த வழக்கில் 'அட்டாக்’ பாண்டியோ விஜயபாண்டியோ கைது செய்யப்படவில்லை. இன்றுவரை அந்த வழக்கு முடிவுபெறாமல் இருக்கிறதாம்''

''அது தி.மு.க. ஆட்சிக் காலம் அல்லவா?''

''ம்! துப்பாக்கியை அனுப்பி, 'அட்டாக்’ மீது பழி போட வைத்ததே பொட்டுவுக்கு ஆதரவான சில போலீஸார்​தானாம். இந்த வழக்கை காரணம் காட்டி, 'அட்டாக்’ பாண்டியை என்கவுன்டரில் போடவும் முயற்சி நடந்துள்ளது. 'அட்டாக்’ பாண்டி தரப்புதான் தலைமறைவாக இருப்பதில் கில்லாடி ஆயிற்றே. மாதக் கணக்கில் தலைமறைவாக இருந்து, அழகிரியின் கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டுபோய் உயிர் தப்பினார் 'அட்டாக்’.

'பொட்டு தூண்டிவிட்ட போலீஸார், 'அட்டாக்’கை மதுரையை விட்டே விரட்டிவிட்டனர். இதனால் பொட்டு நிம்மதியாக இருந்தார். ஆனால், அட் டாக்குக்கோ பொட்டுவைப் போட்டே ஆக வேண்டும் என்ற வெறி கிளம்பி இருக்கிறது. ஆனால், தன் எதிர்காலம் கருதி அதை தள்ளிப் போட்டுக்​கொண்டே வந்திருக்கிறார் 'அட்டாக்’ ’ என்றும் சொல்​கிறார்கள். கடந்த 31-ம் தேதி பொட்டுவின் கதை முடிந்து போனது.''

''திடீரென இவர்கள் சரண் அடைய என்ன காரணம்?''

''களத்தில் நின்று கொலை செய்தவர்கள் ஆறு பேரையும் விசாரித்து முடித்து விட்ட போலீஸார், மேற்​கொண்டு தகவல்கள் தெரிய வேண்டும் என்றால் விஜயபாண்டி, பிரபு ஆகியோரைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர். சேலம் சிறையில் இருக்கும் பொட்டு கொலையாளிகள் ஏழு பேரையும் 'அட்டாக்’ தரப்பு வக்கீல்கள் சந்தித்துப் பேசி இருக்கிறார்கள். போலீஸ் விசாரணையின்போது தாங்கள் விஜயபாண்டி, பிரபு ஆகியோரின் பெயரைச் சொல்லி விட்டோம் என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதனால்தான் தடாலடியாக அவர்கள் இருவரும் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்​தனராம். வெள்ளி அல்லது சனிக்கிழமை மாலைக்குள் போலீஸார் அவர்களை கஸ்டடியில் எடுத்து விடுவார்கள். இவர்கள் சொல்வதை வைத்து 'அட்டாக்’ இருக்கும் இடம் தெரிய வரும்'' என்ற கழுகார் டிராக் மாறினார்!

''அழகிரியின் பதவிக்குச் சிக்கல் என்பதை நான் உமக்கு கடந்த இதழில் விரிவாகச் சொல்லி இருந்தேன். அவரை கருணாநிதி அழைத்ததாகவும் அவர் வரவில்லை என்பதையும் உமக்குச் சொல்லி இருந்தேன். வியாழக்கிழமை காலையில் மதுரையில் இருந்து அழகிரி சென்னை வந்துள்ளார். அனேகமாக அன்று இரவு அவர் கருணாநிதியைச் சந்திக்கலாம். அமைச்சர் பதவி, மதுரை வழக்கு விசாரணை ஆகியவை இதன் பிரதான அம்சங்களாக இருக்கும்!''

மிஸ்டர் கழுகு: நீக்கு... நீக்காதே...

''குஷ்பு..?''

''குஷ்புவைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் பதில் கருணாநிதி தீர்மானமாக இருக் கிறார். சென்னையில் அவரது வீட்டைத் தாக்கியவர்கள், திருச்சி ஹோட்டலில் வைத்து குஷ்புவைத் தாக்கியவர்கள் யார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டாராம் கருணாநிதி. அவர்களைக் கட்சியை விட்டு நீக்கச் சொல்லி விட்டாராம். ஆனால், அதற்கு ஸ்டாலின் சம்மதிக்கவில்லை. இதனால் திடீர் சத்தியாகிரகம் தொடங்கி விட்டாராம்.''

''அது என்ன?''

''நான்கைந்து நாட்களாக அறிவாலயத்துக்கே கருணாநிதி வரவில்லை. வீட்டிலேயே முடங்கி விட்டார். தலைவர் வருவார் என்று காலையும் மாலையும் வாசலை சுத்தமாக வைத்திருந்தே ஏமாந்து போனார்களாம் மேனேஜர்கள். இதன் பிறகும் ஸ்டாலின் தரப்பு மசியவில்லை. பொறுமை இழந்தவராக அறிவாலயத்துக்கு புதன்கிழமை வந்து விட்டார் கருணாநிதி.''

''ஸ்டாலின்?''

''அவர் துபாயில் நடந்த இலக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டதால் இரண்டு மூன்று நாட்களாக சென்னையில் இல்லை. 'நடவடிக்கை எடுத்தால் இரண்டு தரப்பிலும்தான் எடுக்க வேண்டும். உள்கட்சி விவகாரங்கள் பற்றி பத்திரிகையில் பேசியதால்தான் பிரச்னை வந்தது. பேசியவர் மீது நடவடிக்கை எடுத்து​விட்டுத்தான், பிரச்னை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

மிஸ்டர் கழுகு: நீக்கு... நீக்காதே...

என்று சொல்லும் ஸ்டாலின் ஆதர​வாளர்கள், 'இனி யாரும் இந்த விவகாரம் குறித்து பேட்​டியோ அறிக்கையோ விடக் கூடாது என்று தலைமைக் கழகம் அறிவித்த பிறகும், குஷ்பு ஒரு பத்திரி​கைக்கு பேட்டி கொடுத்துள்ளார். இது தலைமைக் கழகத்தின் கட்டுப்​பாட்டை மீறிய செயல் இல்லையா? இதைத் தலைவர் கண்டிக்காதது ஏன்?’ என்று கேட்க ஆரம்பித்​துள்ளனர்.''

''ஸ்டாலின், ரியாக்ஷன் எதுவும் காட்டினாரா?''

''இல்லையாம். அவரது மணி விழா மார்ச் 1-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் வேறு எந்த சர்ச்சையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம். ஆள்ஆளுக்கு பேனர், கட்-அவுட் வைத்து களேபரம் செய்து பொதுமக்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதால், 'அடக்கமாகக் கொண்​டாடுங்கள் பிறந்த நாளை’ என்ற அறிவிப்பும் அவரது தரப்பில் இருந்து வரப்போகிறதாம். ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கை, பொதுப்பணிகளைச் சொல்லும் மலர் தயாரிக்கும் வேலை மட்டுமே பிரமாண்டமாக நடக்கிறது'' என்ற கழுகாரிடம், ''சி.எம். நியூஸ் ஏதாவது உண்டா?'' என்றோம்.

''சிறுதாவூர்வாசியாக மாறிவிட்டார் ஜெயலலிதா. கவர்னர் உரை முடிந்ததும் போயஸ் கார்டனில் இருந்து சிறுதாவூர் சென்றார் ஜெயலலிதா. அங்கிருந்துதான் கோட்டைக்கு வந்து செல்கிறார். போயஸ் கார்டன் வீட்டில் மராமத்துப் பணி நடக்கிறது. சுவற்றில் பதிக்கப்பட்டு இருந்த கிரானைட் கற்களை உடைத்து எடுத்துவிட்டு, புதிய கிரானைட் கற்கள் பதிக்கப்படுகின்றன. புதிய மாடிப்படி கட்டப்பட இருப்பதாகவும் சொல்கிறார்கள். அனேகமாக இந்தப் பணி முடிய ஒரு மாதம் ஆகலாம். பட்ஜெட் விவாதங்கள் தொடங்கும் வரை அவர் சிறுதாவூரில் இருந்துதான் வந்து செல்வாராம்'' என்றபடி கழுகார் கிளம்பினார்.

கோடிகள் போற்றுதும்!

மதுரை மண்ணின் பெருமை பேசும் 'மாமதுரை போற்றுவோம்’ என்ற நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. நல்ல நோக்கத்துக்காக நடத்தும் நிகழ்ச்சி என்பதால் மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததோடு, நன்கொடை வசூலித்துக் கொள்ளவும் அனுமதி அளித்தார். இதைச் சாக்காக வைத்துக்கொண்டு சிலர் புகுந்து விளையாடி விட்டார்களாம். பிரச்னைக்குரிய கிரானைட் நிறுவனத்திடம் வேறு பெயரில் கணிசமான தொகைக்கு  செக் வாங்கி இருக்கிறார்கள். இதுபோக, அன்அக்கவுன்ட்டாகவும் தொகை கைமாறி உள்ளதாம். ''வாங்கியவர் யார் என்று மேலிடத்துக்கு அனுப்பி உள்ளோம்'' என்கிறார்கள் மதுரை ர.ர-க்கள்.

அம்மா மெஸ்!

சென்னை மாநகராட்சி சார்பில் ரூபாய்க்கு ஒரு இட்லி, தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய் என்னும் திட்டத்தை தொடங்க இருக்கிறார்கள். முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 24-ம் தேதி, ஜெயலலிதா, இதைத் தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக அன்று, மண்டலத்துக்கு ஒரு ஹோட்டல் என்று 15 ஹோட்டல்கள் திறக்கப்படுகின்றன. மார்ச் 31-க்குள் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு ஹோட்டல் என்று 200 ஹோட்டல் திறக்கப் போகிறார்கள். 'அரசே கஞ்சித் தொட்டி திறக்கிறது’ என்று இப்போதே எதிர்க் கட்சிகளிடம் இருந்து விமர்சனங்கள் வரத்தொடங்கி விட்டன.