Published:Updated:

'ஜெயலலிதா வெட்கப்பட வேண்டும்!'

கொந்தளிக்கும் திருமா

'ஜெயலலிதா வெட்கப்பட வேண்டும்!'

கொந்தளிக்கும் திருமா

Published:Updated:
##~##

''இந்தியாவில் 10 சதவிகித அளவில் மட்டுமே சாதி கலப்புத் திருமணங்கள் நடை​பெறுகின்றன. தமிழகத்தில் இரண்டரை விழுக்காடுதான். அதிலும் ஒரு பெண் தனது சாதியைவிட சமூக அந்தஸ்து குறைந்த சாதி இளைஞரை திருமணம் செய்து கொள்வது வெறும் 1.66 விழுக்காடுதான் என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. உண்மை இவ்வாறு இருக்க... மருத்துவர் ராமதாஸ், தலித் இளைஞர்கள் திட்டமிட்டு அதிக அளவில் காதல், கடத்தல் திருமணம் செய்வதாக அண்டப் புளுகு, ஆகாசப் புளுகை அள்ளி விடுகிறார். இது நச்சுப் பிரசாரம்''-அதிரடியாக ஆரம்பித்தார் திருமாவளவன். 

''தலித்களுக்கு எதிராகப் பிற சாதி இயக்கங்களை ஒன்றிணைத்து பா.ம.க. வேகம் காட்டுவதன் பின்னணியில் அரசியலைத் தாண்டி வேறு ஏதேனும் உள்நோக்கம் இருக்கும் என்று கருதுகிறீர்களா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தலித்களுக்கு எதிரான தாக்குதல் என்பதைவிட தமிழ்ச் சமூகத்தின் மீதான தாக்குதல், தமிழர் ஒற்றுமைக்கு எதிரான தாக்குதல் என்றே கருதுகிறேன். உழைக்கும் மக்களுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையில் எப்போதும் ஒற்றுமை ஏற்படக்கூடாது  என்பது ராமதாஸின் நோக்கம். காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு போன்ற விவகாரங்களில் தமிழர்கள் ஒன்றுபட்டுப் போராடியதைப் பொறுக்க முடியாமல் சாதி உணர்வைத் தூண்டி தமிழர் ஒற்றுமையை சீர்குலைக்க நினைக்கிறார். இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்காக கொடியவன் ராஜபக்ஷேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் டெசோ அமைப்பின் செயல்பாடு, லண்டனில் உலகத் தமிழர் மாநாடு, ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் என அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்துவரும் சூழலில் அவற்றை முற்றிலும் பின்னுக்குத் தள்ளும் விதத்தில், 'அய்யோ நாடகக் காதல்... அய்யய்யோ நாடகக் காதல்’ என்று கூப்பாடு போட்டு, தமிழர்களின் பிரச்னைகளைத் திசை திருப்புகிறார் மருத்துவர் ராமதாஸ். சிங்கள இன வெறி யர்களும், அவர்களின் உளவுக் கும்பலும் தமிழ​கத்தில் ஆழ மாக வேரூன்றியுள்ள​தாக  சொல்லப்​படும் நேரத்தில் பா.ம.க-வின் செயல்பாடுகள் பலத்த சந்தேகத்தைக் கிளப்பு​கிறது''

'ஜெயலலிதா வெட்கப்பட வேண்டும்!'

''அ.தி.மு.க. அரசு ராம​தாஸுக்கு எதிராகத்தானே இருக்கிறது?''

''தர்மபுரி தாக்குதல் என்பது சுயலாபத்​துக் காக முன்பே தெளி​வாக திட்டமிட்டு நடத்தப்​பட்ட தாக்குதல். கடந்த ஆண்டு, மாமல்லபுரத்தில் பா.ம.க. நடத்திய சித்திரை விழா​வில் தலித்​களை வெட்டு​வோம், குத்துவோம் என்று சாதி மோதலைத் தூண்டும் விதத்தில் பேசி னர். அப்போது, இந்த அரசு என்ன கிழித்தது? தர்மபுரி வன்முறைக்கு மூல காரணமானவர்கள் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன? தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இப்படி நடந்து விட்டதே என்று முதல்வர் ஜெயலலிதா வெட்கப்பட வேண்டும். ஊருக்குள் நுழையத் தடை விதிக்கிறோம் என்ற பெயரில் நாடகமாடக் கூடாது. ராஜஸ்தானில் ஆஷிஸ் நந்தி என்ற எழுத்தாளர், 'தலித்கள் அரசியலுக்கு வந்ததால்தான் ஊழல் மலிந்து விட்டது’ என்றார். அவர் மீது அந்த மாநில அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், இங்கே மருத்துவர் ராமதாஸ், தலித்கள் ஒழுக்கக் கேடானவர்கள், பொறுக்கிகள் என்று பொது மேடைகளில் பேசுகிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல், இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது.''

''திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேருவதை விடுத்து மாற்று அணி பற்றி யோசிக்கவில்லையா?''

''மாற்று அணி அமைத்து அதற்குத் தலைமை ஏற்கும் வாய்ப்பு பா.ம.க., ம.தி.மு.க-வுக்கும் இருந்தது. ஆனால், அவர் களும் திராவிடக் கட்சி​களுக்கு முட்டுக் கொடுத்து அதைக் கெடுத்துக் கொண்டனர். இங்குள்ள சில கட்சிகள் எங்களுடன் இணைந்து செயல்படும் பக்குவத்தில் இல்லை. மாற்று அணி குறித்து இப்போது நாங்கள் யோசித்தாலும், தமிழ்நாட்டு சாதிய இறுக்கக் கட்டமைப்பு அதை அனுமதிக்காது என்பதே வேதனையான உண்மை.''

''நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி?''

''தமிழ்நாட்டில் இரண்டு திராவிடக் கட்சிகளும் நினைத்ததுதான் கூட்டணி. அவர்கள் விரும்பும் கட்சிகள்தான் கூட் டணியில் இருக்க முடியும். நாங்கள் யாரோடு இருக்கிறோம் என்பதைவிட, தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் என்ன நினைக்கிறது என்பதே முக்கியம்.!''

- தி.கோபிவிஜய்

படம்: கே.கார்த்திகேயன்