Published:Updated:

28.50 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் தொடக்கம்!

28.50 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் தொடக்கம்!
28.50 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் தொடக்கம்!

சென்னை: 28 லட்சத்து 50 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தின் கீழ், 3 மாணவ- மாணவியருக்கு கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று வழங்கினார்.
 

28.50 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் தொடக்கம்!

மேலும், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத் துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 பேர்களுக்கு தொழில்நுட்ப உதவியாளர், இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 1 நபருக்கும்,

இத்துறையில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த 10 பேர்களின் வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 1 நபருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
 

28.50 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் தொடக்கம்!

இதேபோல், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களின் பயன்பாட்டிற்காக 53 லட்சத்து 3 ஆயிரத்து 913 ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 10 ஜீப்புகளை வழங்கும் அடையாளமாக 2 மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு ஜீப்புகளுக்கான சாவிகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.