Published:Updated:

அரசு கேபிள் டி.வி.க்கு விரைவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு விரைவில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்க கோரி பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஏழை, நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டண சேவை வழங்கவே அரசு கேபிள் தொடங்கப்பட்டது என்றும், கடந்த 2012ஆம் ஆண்டு அளித்த விண்ணப்பம் மீது இதுவரை நடவடிக்கை ஏதும் இல்லை என்றும், அதற்கு பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

தனியார் நலன்களுக்காகவே முந்தை அரசு டிஜிட்டல் உரிமம் வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள ஜெயலலிதா, ஜுன் 3ஆம் தேதி உங்களிடம் (பிரதமர்) அளித்த கோரிக்கை மனுவில் இது குறித்து வலியுறுத்தி இருந்தேன் என்றும், குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை மக்களுக்கு வழங்க டிஜிட்டல் உரிமம் தேவை என்றும் கூறியுள்ளார்.

எனவே, தமிழக அரசு கேபிள் டி.வி.க்கு உடனே டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.