Published:Updated:

தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடமாட்டோம்: வைகோ

  தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடமாட்டோம்: வைகோ
தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடமாட்டோம்: வைகோ

விருதுநகர்: நாடாளுமன்ற தேர்தலில் அடைந்த தோல்வியை கண்டு துவண்டு போய் விடமாட்டோம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

  தோல்வியை கண்டு நாங்கள் துவண்டு விடமாட்டோம்: வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க. தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொண்டர்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆய்வுக் கூட்டம் இன்று (5ஆம் தேதி) நடந்தது.

அதற்கு முன்பாக வைகோ நிருபர்களிடம் கூறுகையில், ''நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க. ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் வெற்றி பெற்றது.

அ.தி.மு.க. அதிகார துஷ்பிரயோகம் செய்து காவல்துறையினர் மூலம் ஊர் ஊராக கோடிக்கணக்கில் பணம் எடுத்து சென்று, வீடுகள் தோறும் விநியோகித்தார்கள். நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் கமிஷன் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடந்து கொண்டது. அதனால்தான் நாங்கள் தோற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும் ம.தி.மு.க.வினர் சோர்ந்து போய் விடவில்லை.

தேர்தல் தோல்வி எங்களை பாதிக்கவில்லை. தோல்வியை கண்டு துவண்டு போய் விட மாட்டோம். ம.தி.மு.க.வினர் எப்போதும் போல் உற்சாகமாகத்தான் இருக்கின்றனர். இதே உற்சாகத்தோடு மக்கள் பிரச்னைக்காக ம.தி.மு.க. தொடர்ந்து போராடும்'' என்றார்.

எம்.கார்த்தி

படம்: ஆர்.எம்.முத்துராஜ்