Published:Updated:

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி: வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி: வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி: வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி: வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு!

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை தங்கள் கட்சிக்கு வழங்க சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மறுக்கும் பட்சத்தில், நீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்து மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற, குறைந்த பட்சம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதமாவது, அதாவது 54 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். கடந்த காலங்களில் பல முறை எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கும் வழங்கப்படாமல் இருந்துள்ளது.

பழைய நடைமுறைகள் அடிப்படையில் இந்த முறையும் எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாக வைக்கப்படும் என கூறப்பட்டது. ஆனாலும் தங்களது தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 55 இடங்களை வென்றிருப்பதால், எதிர்க்கட்சி பதவி தங்களுக்கு தானாகவே உரிமை உள்ளதாக ஆகிவிட்டதாகவும், எனவே அதனை தங்களுக்கு தர வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. ஆனால் இந்த விவகாரம் குறித்து மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இறுதி முடிவை இன்னும் அறிவிக்கவில்லை.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவி: வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு!

இதற்கிடையே கடைசி முயற்சியாக மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைமை கொறடா ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை அண்மையில் சந்தித்து, எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு முன்னதாக சபாநாயகர் தனது முடிவை அறிவிப்பார் என தெரிகிறது

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை காங்கிரசுக்கு அளிக்க சபாநாயகர் மறுக்கும் பட்சத்தில் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர காங்கிரஸ் முடிவு டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் காங்கிரஸின் கோரிக்கையை ஏற்க ஆளும் பா.ஜனதா தயாராக இல்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜனதா மூத்த தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி, இதுபோன்ற கூச்சல் போடுவதை காங்கிரஸ் கட்சி கைவிட்டுவிட்டு, எது சரி, எது தவறு என்பது குறித்து சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்கள் ( காங்கிரஸ்) எதை விதைத்தார்களோ அதனையே அறுவடை செய்கிறார்கள்" எனக் கூறினார்.

மற்றொரு பா.ஜனதா தலைவரான சுப்பிரமணியன் சுவாமியோ, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற குறைந்தது 55 இடங்களாவது வேண்டும் என்பது தெளிவான விஷயம். அவர்கள் வேண்டுமானால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும்" எனக் கூறியுள்ளார்.