Published:Updated:

லார்ட்ஸ் 200

விகடன் விமர்சனக்குழு
லார்ட்ஸ் 200
லார்ட்ஸ் 200

லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் 1814ம் ஆண்டு தாமஸ் லார்ட்ஸ் என்பவரால் தொடங்கப்பட்டது. பின்னர் மெல்பர்ன் கிரிக்கெட் கிளம்(எம்.சி.சி)யால் வாங்கப்பட்டு தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. முதலில் மிடில்செக்ஸ், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் அணிகளின் ஹோம் கிரவுண்டாக விளங்கியது

லார்ட்ஸ் மைதானம் 28000 ரசிகர்கள் பார்க்கும் அளவிற்கு பிரம்மாண்டமான அரங்குகளை கொண்டது.இந்த மைதானத்தை ஐசிசி ''ஹோம் ஆஃப் கிரிக்கெட்டாக" அறிவித்தது. ஒரு பந்துவீச்சாளரை கேட்டால் நான் லார்ட்ஸில் அதிக விக்கெட் வீழ்த்தவேண்டும் என்பார், ஒரு பேட்ஸ்மேனை கேட்டால் நான் லார்ட்ஸில் சதமடிக்க வேண்டும் என்பார் அந்த அளவிற்கு லார்ட்ஸ் கிரிக்கெட் வீரரையும், ரசிகனையும் கட்டிப்போடும் இடமாக இருந்து வருகிறது.

லார்ட்ஸ் மைதானம் இன்று 200வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திலேயா மற்றும் இங்கிலாந்துக்கு இடையே 1884ம் ஆண்டு நடைபெற்றது.இந்த மைதானத்தில் 8 ஸ்டாண்டுகளும், 1 பெவிலியன் மற்றும் ஜெ.பி.மார்கன் மீடியா சென்டர் என பல வசதிகளை கொண்டு சர்வதேச அளவில் சிறந்த மைதானமாக லார்ட்ஸ் விளங்குகிறது.

லார்ட்ஸ் 200

இதுமட்டுமின்றி இந்த மைதானத்தில் எம்சிசி கிரிக்கெட்டுக்கான பிரத்யேக மியூசியம் ஒன்றையும் நிறுவியுள்ளது.இந்த மைதானம் எந்த ரசிகனுக்கு நினைவிருக்கிறதோ இல்லையோ இந்திய ரசிகன் இந்த மைதானத்தை மறக்க மாட்டான்.1983ல் முதல் உலகக்கோப்பையை கபில்தேவ் தலைமையிலான அணி முத்தமிட்டது இந்த லார்ட்ஸ் மைதானத்தில் தான்.பின்னர் வெளிநாடுகளில் இந்திய கிரிக்கெட் அணி சுண்டெலி தான் என ஏளனம் செய்யப்பட்டபோது இந்திய அணி 2002ம் ஆண்டு நாட்வெஸ்ட் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் 326 ரன்களை சேஸ் செய்து அப்போதைய இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி சட்டையை கழற்றி சுற்றியது லார்ட்ஸ் பால்கனி என்றதும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் நினைவுக்கு வரும் அழியாத நிகழ்வாக இன்றும் உள்ளது.

லார்ட்ஸ் மைதானத்தில் இன்று 200வது ஆண்டை சிறப்பிக்கும் விதமாக ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணிக்கும் எம்சிசி அணிக்கும் ஒருநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ரெஸ்ட் ஆஃப் வேர்ல்டு அணிக்கு ஷேன் வார்னே கேப்டனாகவும், எம்சிசி அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றனர். சற்று முன்னர் சேவாக் அவுட் ஆனபோது சச்சின் பிரெட் லீயை பாராட்டுகிறார். யுவராஜ் சிங் சிக்ஸர் அடிக்கும் போது டெண்டுல்கர் அவரை அவுட் செய் என பந்துவீச்சாளரை உற்சாக படுத்துகிறார். இதெல்லாம் ஐபிஎல்க்கு பிறகு சாதாரணமானாலும் லார்ட்ஸ் மைதானத்தில் இதனை காண்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு காணக்கிடைக்காத விருந்தாகும். 200வது டெஸ்ட்டுக்கு பிறகு சச்சின் கிரிக்கெட் மட்டையை தொடமாட்டார் என அழுத ரசிகர்களுக்கு இன்று கொண்டாட்டம் தான்! இன்று அவர் டக் அவுட் ஆனாலும் சரி, சதமடித்தாலும் சரி சச்சினை கிரிக்கெட் மைதானத்தில் அதுவும் லார்ட்ஸ் 200வது ஆண்டில் பார்த்த ரசிகனுக்கு இன்று திருவிழா தான்!!

லார்ட்ஸ் 200!!

கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகனும் நான் லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் பார்க்க ஆசைபடுவேன் என்பான். அப்படிப்பட்ட லார்ட்ஸ் மைதானத்தின் 200வது பிறந்தநாளை நாமும் கொண்டாடுவோம்!!

ச.ஸ்ரீராம்