Published:Updated:

ஆந்திரா: பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி - தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு

நிகழ்ச்சியை தொடங்கிவைத்துவிட்டு சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு, மக்கள் பரிசுகளை பெற விரைந்தனர்.

ஆந்திரா: பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி - தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் சந்திரபாபு நாயுடு

நிகழ்ச்சியை தொடங்கிவைத்துவிட்டு சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு, மக்கள் பரிசுகளை பெற விரைந்தனர்.

Published:Updated:
சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு, 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தொடங்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த 28-12-2022 அன்று நெல்லூர் மாவட்டத்திலுள்ள கந்துகூரில் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் தெலுங்கு தேசக் கட்சியின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அந்தக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு உரையாற்றவிருந்தார். அவருடைய வருகையின்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில் மக்கள் சிதறி ஓடத் தொடங்கினர். அந்த இடிபாடுகளில் சிக்கி கீழே விழுந்தவர்களில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வத் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ரூ.10 லட்சம் வழங்குவதாகதெரிவித்திருந்தார் சந்திரபாபு நாயுடு. இந்தச் சம்பவம் ஆந்திராவில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான சந்திரபாபு நாயுடு, "கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதும், ஆளும் அரசின் உள்ளூர் காவல்துறையின் பொறுப்பு. ஆனால் அதில் ஆளும் அரசு தோல்வியடைந்துவிட்டது" எனக் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், நேற்று குண்டூர் மாவட்டத்தில் மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்றிருந்த பொதுக்கூட்டத்தில், மூன்று பேர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த சம்பவம் மேலும் சர்ச்சையாகியிருக்கிறது.

சந்திரபாபு நாயுடுவின் பொதுக் குழு கூட்டம்
சந்திரபாபு நாயுடுவின் பொதுக் குழு கூட்டம்
ட்விட்டர்

இது தொடர்பாக காவல்துறை தரப்பு," பொதுக் கூட்டத்தில் மக்களுக்கு ஆடை மற்றும் பரிசு பொருள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை தொடங்கிவைத்துவிட்டு சந்திரபாபு நாயுடு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார். அதன் பிறகு, மக்கள் பரிசுகளை பெற விரைந்தனர். அந்தக் கூட்டத்தை அமைப்பாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ஏற்பட்ட நெரிசலில் 3 பெண்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்திருக்கின்றனர்" எனத் தெரிவித்திருக்கிறது.

தொடர்ந்து இரண்டாவது முறை சந்திரபாபு நாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் உயிரிழந்திருப்பது ஆந்திர அரசியலில் விவாதமாகியிருக்கிறது. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்திருக்கினனர்.