Published:Updated:

மத்திய அரசின் மொத்த கடன் தள்ளுபடியில் விவசாயத்துக்கு இவ்வளவுதானா?

பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், மொத்தம் 78,939 என்றிருந்த பொதுத்துறை வங்கிகளின் கிளை எண்ணிக்கை 87,580 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்
நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்

முத்ரா வங்கிக்கடனில் 3 சதவிகிதம் அளவுக்கு வாராக்கடனாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ராஜ்ய சபாவில் கேள்வியொன்றிற்கு நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், இதுவரை வழங்கப்பட்ட முத்ரா வங்கிக்கடன் தொகை ரூ.6.04 லட்சம் கோடியில், 2.86% மதிப்புள்ள ரூ.17,251.52 கோடி வாராக்கடனாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முத்ரா வங்கிக்கடன்
முத்ரா வங்கிக்கடன்
vikatan

பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சி குறித்து கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர், மொத்தம் 78,939 என்றிருந்த பொதுத்துறை வங்கிகளின் கிளை எண்ணிக்கை 87,580 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Vikatan

பொதுத்துறை வங்கிகளில் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, 2014-15 நிதியாண்டில் ரூ.47,658 கோடியும், 2015-16 நிதியாண்டில் ரூ.56,847 கோடியும், 2016-17 நிதியாண்டில் ரூ.79,048 கோடியும், 2017-18 நிதியாண்டில் ரூ.1,24,275 கோடியும், 2018-19 நிதியாண்டில் ரூ.1,86,632 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

விவசாயக்கடன் தள்ளுபடி
விவசாயக்கடன் தள்ளுபடி
vikatan

கடன் தள்ளுபடியில், விவசாயம் மற்றும் அதுசார்ந்த செயல்பாடுகளுக்காக மட்டும் முறையே, 2014-15 நிதியாண்டில் ரூ.2,833 கோடியும், 2015-16 நிதியாண்டில் ரூ.6,361 கோடியும், 2016-17 நிதியாண்டில் ரூ.7,091 கோடியும், 2017-18 நிதியாண்டில் ரூ.10,345 கோடியும், 2018-19 நிதியாண்டில் ரூ.12,556 கோடியும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. மொத்த கடன் தள்ளுபடியோடு ஒப்பிடுகையில் விவசாயத்துக்கான தள்ளுபடி, குறைவாகவே உள்ளது.