Published:Updated:

ராஜஸ்தான்: 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இடிப்பு - பாஜவினர் குற்றச்சாட்டு

300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இடிப்பு ( ட்விட்டர் )

ராஜஸ்தான் மாநிலத்தில் 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இடிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அல்வார் மாவட்டத்தில் ஏப்ரல் 22-ம் தேதி 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டது. சாலையோரங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி சிவன் கோவிலையும், கடைகளையும் மாநில நிர்வாகம் இடித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. ``ஆக்கிரமிப்பு முயற்சிக்கு முன்பே, கோவில் பூசாரிகள் சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றினர்” என்று மாவட்ட நீதிபதி சிவபிரசாத் நாகேட் கூறினார்.

300 ஆண்டுகள்  பழமையான சிவன் கோயில் இடிப்பு
300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் இடிப்பு
ட்விட்டர்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கோவிந்த் சிங் தொட்டசரா செய்தியாளர் சந்திப்பில், ``இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆட்சியின் போது ராஜஸ்தானில் பாஜக ஆட்சியின் போது பல கோயில்கள் இடிக்கப்பட்டன’’ என குற்றம் சாட்டினார்.

மேலும் இதுகுறித்து, பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, ``காங்கிரஸ் அரசு வளர்ச்சி பணி எனக்கூறிக் கொண்டு, 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை இடித்துள்ளனர். 300 ஆண்டுகள் பழமையான கோவில் இடிக்கப்பட்டிருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக அமைந்துள்ளது’’ என கூறியுள்ளார்.

இந்த விவகாரம் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism