Published:Updated:

''2016-ல் எங்கள் ஆட்சி!'' - 'மாரத்தான்' அன்புமணி

கே.ராஜா திருவேங்கடம்

''2016-ல் எங்கள் ஆட்சி!'' - 'மாரத்தான்' அன்புமணி

கே.ராஜா திருவேங்கடம்

Published:Updated:
##~##

ர்மபுரி கலவரம், காதலர்களுக்கு எதிரான நிலவரம் என்று தமிழகத்தில் பா.ம.க-வை ஆளாளுக்கு வறுத்தெடுக்க, துபாய் மாரத்தானில் உற்சாகமாகப் பங்கெடுத்துத் திரும்பிஇருக்கிறார் அன்புமணி ராமதாஸ்.

 ''சின்ன வயசுல இருந்தே ஓட்டப் பந்தய ஆர்வம் உண்டு. மத்திய அமைச்சராக இருந்தபோதே தர்மபுரி மாரத்தான்ல ஓடியிருக்கேன். இந்த துபாய் மாரத்தான் உலக அளவில் பிரபல மான போட்டி. கிட்டத்தட்ட 15 ஆயிரம் பேர் ஓடினோம். பந்தய தூரத்தை முழுமையாகக் கடந்ததற்கான மெடல் ஜெயிச்சேன்!''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2016-ல் எங்கள் ஆட்சி!''  -  'மாரத்தான்' அன்புமணி

''தர்மபுரி விவகாரத்துக்குப் பிறகு அத்தனை கட்சிகளும் பா.ம.க-வுக்கு எதிர் அணியில் இருக்கின்றனவே?''

''அந்த விவகாரத்தில் விடுதலைச் சிறுத்தைகளைத் தூண்டிவிட்டது தி.மு.க. அவர்களுக்கு ஆதரவாக திராவிடர் கழகமும், கம்யூனிஸ்ட்களும் குரல் கொடுத்தார்கள். மற்றபடி விஜயகாந்தோ, பிற கட்சியினரோ, எங்கள் மீது தவறு இருப்பதாகச் சொல்லவில்லை. நாங்கள் எந்தக் காலத்திலும் தலித் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. அதே சமயம் தலித் என்ற போர்வையில் எங்களை மிரட்டுபவர்களிடம் நாங்கள் அடங்கி அமைதியாகப் போகவும் முடியாது!''

''2016-ல் எங்கள் ஆட்சி!''  -  'மாரத்தான்' அன்புமணி

''மதுவுக்கு எதிராக இப்போது பல கட்சிகள் போராடத் தொடங்கிவிட்டன. அவர்களை எல்லாம் ஓர் அணியில் இணைக்க நீங்கள் திட்டமிடலாமே?''

''ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்... பாட்டாளி மக்கள் கட்சி மதுவுக்கு எதிரான போராட்டங்களை அரசியல் லாபத்துக்காக எப்போதும் பயன்படுத்தாது. இனி, யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ம.க. தனித்துதான் போட்டியிடும். 'இவங்க இப்ப இப்படித்தான் சொல்வாங்க. தேர்தல் சமயத்தில் ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி சேர்ந்துடுவாங்க’ என்று அவதூறு பரப்புவார்கள் சிலர். ஆனால், பத்திரத்தில் எழுதி கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். யாருடனும் இனி கூட்டணி இல்லை... இல்லை... இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் அடித்தளம் அமைப்போம். 2016 - சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்போம்.

வைகோவிடம் நான் கேட்பதெல்லாம்... தயவுசெய்து மது எதிர்ப்பை அரசியல் ஆக்காதீர்கள். இது அரசியல் பிரச்னை அல்ல. மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. அதை வைத்துக் குளிர்காய நினைக்க வேண்டாம். சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்ல; கிராமங்களில் உள்ள சிறுவர்களும் இப்போது மது அருந்தத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. காதலை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள் என்ற காரணத்துக்காக வினோதினி, வித்யா ஆகிய பெண்கள் மீது ஆசிட் வீசினார்களே... அந்தக் கொடும்பாதகர்கள் மது போதையில்தான் அந்தக் கொடூரத்தைச் செய்திருக்கிறார்கள். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்துகொள்ளுங்கள்!''

''திடீரென்று வைகோ - ஜெயலலிதா சந்திப்பு நிகழ்ந்திருக்கிறதே?''

''நிகழவில்லை. நிகழ்த்தப்பட்டு இருக்கிறது. கூட்டணியில் இருந்த காலத்திலேயே வைகோவால் ஜெயலலிதாவைச் சந்திக்க முடியாது. இப்போது கொளுத்தும் வெயிலில் நட்ட நடு சாலையில் எதிர்பாராமல் சந்தித்ததாகக் கதை சொல்கிறார்கள். இது திட்டமிட்டு நடந்த சந்திப்புதான். வைகோ பொதுவாக காலையிலும் மாலையிலும் மட்டுமே நடைபயணம் மேற்கொள்வார். மதியம் ஓய்வில்தான் இருப்பார். ஆனால், அன்றைய தினம் மட்டும் அவர் மதியத்தில் நடக்கிறார். எதிர்பாராமல் ஜெயலலிதா வந்து காரை நிறுத்தி வாழ்த்து சொல் கிறார். சாலையில் வைத்தே ஏழு நிமிடங்கள் பேசுகிறார்கள். இந்தச் சந்திப்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கான முன்னோட்டம். வைகோவுக்கு அ.தி.மு.க-வுடனான கூட்டணியை விட்டால், வேறு வழி இல்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism