Published:Updated:

112வது பிறந்த நாள்: காமராஜர் சிலைக்கு ஜெயலலிதா உள்பட தலைவர்கள் மரியாதை!

சென்னை: பெருந்தலைவர் காமராஜரின் 112வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா உள்பட பல தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் அவரது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்பட்டது. கல்வி தந்தை என்று போற்றப்படும் காமராஜரின் சொந்த ஊர் விருதுநகர் ஆகும். விருதுநகரில் அவர் வசித்த வீட்டை, காமராஜரின் நினைவு இல்லமாக அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் காமராஜரின் பிறந்த நாள் , அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் காமராஜரின் பிறந்த  தினமான இன்று அவரது நினைவு இல்லத்தில் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். இந்த நிகழ்ச்சியில் நாடார் மகாஜன சங்க தலைவர் கரிக்கோல்ராஜ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
 
 112வது பிறந்த நாள்: காமராஜர் சிலைக்கு ஜெயலலிதா உள்பட தலைவர்கள் மரியாதை!

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 112வது பிறந்த நாள்: காமராஜர் சிலைக்கு ஜெயலலிதா உள்பட தலைவர்கள் மரியாதை!

தமிழக காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த விழாவில் மாநிலத் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பீட்டர் அல்போன்ஸ், யசோதா உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

எம்.கார்த்தி

படங்கள்:
முத்துக்குமார், ஆர்.எம்.முத்துராஜ்

அடுத்த கட்டுரைக்கு