Published:Updated:

பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்!

Vikatan Correspondent
பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்!
பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்!
பிரிக்ஸ் மாநாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்!

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக பிரேசில் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் டெல்லி திரும்பினார்.

பிரேசிலில் நடைபெற்ற மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி வங்கி தொடங்குவது, அந்த வங்கிக்கு இந்தியா 6 ஆண்டுகளுக்கு தலைவராக நீடிப்பது என்ற வெற்றிகரமான அறிவிப்புக்கு பிறகு, பிரேசில் அதிபர் டில்மா ரவுசப்-பை சந்தித்த பிரதமர் மோடி, பிரேசிலுடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் ஒத்துழைப்பு, விண்வெளி துறை உள்ளிட்ட 3 முக்கிய ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார்.

முன்னதாக, சீன அதிபரை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான எல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காணும்படி வலியுறுத்தினார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினையும் சந்தித்து, தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணு உலையை பார்வையிட வருமாறு அழைப்பு விடுத்த மோடி, நேற்று பிரேசிலில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். வரும் வழியில் ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் நகரில் சிறிது நேரம் தங்கி ஓய்வு எடுத்தார்.

இந்திய குழுவினர் தங்கி இருந்த ஓட்டலில் இருந்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் தொலைபேசி வழியாக பேசிய பிரதமர், அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறவுள்ள இந்திய–ஜெர்மனி இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பின்னர், பிராங்பர்ட் நகரில் இருந்து புறப்பட்ட பிரதமரின் தனி விமானம் நேற்று பின்னிரவு தலைநகர் புதுடெல்லியை வந்தடைந்தது.