Published:Updated:

''தமிழ் விவசாயிகளைக் கண்ணீர் வடிக்க விட மாட்டேன்!''

அடேங்கப்பா கட்நாடக முதல்வர்இரா.வினோத், படம் : செளம்யா

 ##~##
டக்கில் மட்டுமே வலிமையைக் காட்டி வந்த பாரதிய ஜனதா ஆட்சியைத் தெற்கிலும் தலை தூக்கவைத்தவர் புக்கனகெரே சித்தலிங்கப்பா எடியூரப்பா!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என எப்போதும் எடியூரப்பாவின் நாற்காலி ஆடிக்கொண்டே இருக்கும். ஆனால், கோயில் கோயிலாகப் போய் வழிபட்டு, அதைக் காப்பாற்றி வருகிறார் மனிதர்.

ஓர் இனிய காலை வேளையில், பெங்களூரு ரேஸ் கோர்ஸ் வீட்டில் எடியூரப்பா முன்னால் அமர்ந்திருந்தேன்.

''தமிழ் கொஞ்சம் கொஞ்சம் வரும்!'' என 'ஜான்சன் அண்டு ஜான்சன்’ பவுடர் மணக்கப் பேசுகிறார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா!

''தமிழ் விவசாயிகளைக் கண்ணீர் வடிக்க விட மாட்டேன்!''

''தொடர்ந்து உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க் கட்சிகள் அடுக்குகின்றனவே?''

''கடந்த 50 ஆண்டுகளாக கர்நாடகாவை காங்கிரஸும், மதச் சார்பற்ற ஜனதாதளமும் சேர்ந்து கொள்ளையடித்தன. அதை அகற்றியவன் என்பதால், அடக்க முடியாத கோபம் அந்த இரண்டு கட்சிகளுக்கும் இருக்கிறது!

தொடர்ச்சியாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் அவர்கள் தோற்றுவிட்டனர். என்னுடைய ஆட்சியின் சாதனைகளையும், தொலைநோக்குத் திட்டங்களையும் பொறுக்க முடியாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி என் பேருக்கு, களங்கத்தை ஏற்படுத்தத் துடிக் கிறார்கள். அவர்கள் செய்த ஊழல்களைப் பட்டியலிட்டால், உங்கள் பத்திரிகையின் பக்கங்கள் போதாது!''

''ஆனால், உங்கள் மீது கர்நாடக ஆளுநர் பரத்வாஜ் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளித்து இருக்கிறாரே?''

''காங்கிரஸ்காரரிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும்?  அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய கவர்னர், காங்கிரஸின் ஏஜென்ட் ஆகச் செயல்பட்டு வருகிறார். அவரை மாற்றச் சொல்லி குடியரசுத் தலைவரிடமும், பிரதமரிடமும் வேண்டுகோள் விடுத்து உள்ளோம். ஆனால், தனிப்பட்ட முறையில் கவர்னர் மீது மரியாதை உண்டு!''

''அது ஏன் 'பில்லி சூனியம்வைத்துக் கொல்லப் பார்க்கிறார்கள்’ என்று அடிக்கடி புலம்புகிறீர்கள்?''

''கர்நாடகத்தில் காங்கிரஸையும், மதச் சார்பற்ற ஜனதா தளத்தையும் மண்ணைக் கவ்வவைத்ததால், என் மீது பில்லி சூனியங்களை ஏவி விடுகின்றனர். அதிலும் தேவகவுடா குடும்பத்தினரே என்னையும் பி.ஜே.பி-யையும் அழிக்க, இதுபோன்ற கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்!''

''அதில் இருந்து விடுபடத்தான் கடந்த மூன்று மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா என தென் மாநிலங்கள் முழுக்க 47 கோயில்களுக்குச் சென்று வந்திருக்கிறீர்களா?''

''எப்போது எல்லாம் எனக்குப் பிரச்னை வருகிறதோ உடனே கோயிலுக்குச் சென்று தான் வழிபடுவேன். ஆனால், இத்தனை கோயில்களுக்குப் போயிருக்கிறேன் என எண்ணிக்கொண்டே செல்வது என் பழக்கம் இல்லை!''

''தமிழ் விவசாயிகளைக் கண்ணீர் வடிக்க விட மாட்டேன்!''

''இத்தனை பரபரப்புகளுக்கு இடையில் உங்களை இயல்பாக வைத்துக்கொள்ள என்ன செய்கிறீர்கள்?''

''சிறப்புப் பொழுதுபோக்கு என்றெல்லாம் எதுவும் கிடையாது. எப்போதாவது படங்கள் பார்ப்பேன். பழைய பாடல்கள் கேட்பேன். ஆனால், இப்போது அதற்கு நேரம் இல்லை. சின்ன வயதில் கிரிக்கெட் ஆடுவேன். எங்கள் அணியில் நான்தான் பெஸ்ட் ஃபாஸ்ட் பவுலர். இப்போது என் பேரன்கள் ஆடுவதைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், இந்தியா போட்டிகள் ஆடும்போது ஸ்கோர் அப்டேட் கேட்டுக்கொண்டே இருப்பேன். இந்தியா ஜெயிச்சாலே போதும் எனக்கு!''

''பெங்களூரு திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில் நீங்களும் தமிழக முதல்வர் கருணாநிதியும் 'அண்ணன்-தம்பி’ என உறவு பாராட்டினீர்கள். இப்போது எப்படி இருக்கிறது பாச உறவு?''

''என்னுடைய அரசியல் வாழ்க்கை யில் என்னை மிகவும் கர்வப்படவைத்த நிமிடம் எது தெரியுமா? தமிழக முதல்வர் கருணாநிதி வெளிப்படையாக என்னைத் தன்னுடைய 'சின்ன தம்பி’ என்று பாசத்தோடு அழைத்த கணம்தான். அதனால், நானும் மிகவும் பெருமையோடு சொல்கிறேன் அவர் எனக்குப் 'பெரிய தம்பி’ (தம்பிக்கு அர்த்தம் தெரியாமல் அப்படி முதலில் கூறியவர்) இல்லை... இல்லை... அவர் என்னுடைய 'பெரிய அண்ணன்’!''

''நீண்ட முயற்சிக்குப் பிறகு, 19 ஆண்டுகளாக மூடியே இருந்த திருவள்ளுவர் சிலையைத் திறந்தீர்கள். ஆனால், இன்று வரை அது மக்கள் உள்ளே சென்று பார்க்க முடியாமல் போலீஸ் பாதுகாப்போடு வாசல் மூடப்பட்டு இருக்கிறதே?''

''பெங்களூரில் திருவள்ளுவர் சிலையையும், சென்னையில் சர்வக்ஞர் சிலையையும் திறந்தது மறக்க முடியாத வரலாற்று நிகழ்வு. பகைமை உணர்ச்சியோடு இருந்த தமிழரையும், கன்னடரையும் மீண்டும் சகோதரனாக்கி தோள் மேல் கை போடவைத்த நாள். திருவள்ளுவரின் சிலை நுழைவாயிலை மூடியேவைக்க வேண்டும் என்ற எண்ணம் கர்நாடக அரசுக்குத் துளியும் இல்லை. சில கன்னட அமைப்புகளும், விஷமிகளும் தேவை இல்லாமல் பிரச்னைகளைக் கிளப்பிவிடுவார்கள் என்ற அச்சத்தில்தான் அப்படி இருக்கிறது. கூடிய விரைவில் மக்கள் அதனைப் பார்க்கலாம்!''

''நீதிமன்ற ஆணையின்படி கர்நாடக அரசு, காவிரி நதி நீரினை தமிழகத்துக்கு விடுவது இல்லையே?''  

''தமிழ் விவசாயிகளைக் கண்ணீர் வடிக்க விட மாட்டேன்!''

''காவிரி நதி நீர் பங்கீட்டு விவகாரத்துக்குள் நான் மிகவும் ஆழமாகச் செல்ல விரும்பவில்லை. அந்த விவகாரத்தில் கர்நாடகா தெளிவான முடிவில் இருக்கிறது. எவ்வித பிரச்னையும் இன்றி காவிரி நீரைத் தமிழகத்துடன்  பங்கிட்டுக் கொள்ளவே விரும்புகிறேன். நானும் ஒரு விவசாயியின் மகன் என்கிற முறையில், தமிழக விவசாயிகள் எவ்வித வேதனைகளுக்கும் ஆளாகக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். ஆனால், அதே நேரத்தில், தொடர் தற்கொலைகளில் ஈடுபட்டு வரும் எங்கள் விவசாயிகளின் வேதனைகளையும் நான் புரிந்துகொள்ளத்தானே வேண்டும். வரும் காலங்களில் வருண பகவான் வள்ளல் தன்மையோடு இருந்தால், என் சக தமிழ் விவசாயியைக் கண்ணீர் வடிக்கவிட மாட்டேன். இது சத்தியம்!''