Published:Updated:

டிசம்பருக்கு பிறகு தடையில்லா மின்சாரம்: மின்துறை அமைச்சர்

Vikatan Correspondent
டிசம்பருக்கு பிறகு தடையில்லா மின்சாரம்:   மின்துறை அமைச்சர்
டிசம்பருக்கு பிறகு தடையில்லா மின்சாரம்: மின்துறை அமைச்சர்
டிசம்பருக்கு பிறகு தடையில்லா மின்சாரம்:   மின்துறை அமைச்சர்

சென்னை: சென்னையில் டிசம்பருக்கு பிறகு மின் அழுத்தம், மின்குறைபாடு உள்ளிட்ட பிரச்னை இருக்காது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று அ.தி.மு.க உறுப்பினர் அசோக் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், "சென்னை நகரில் தடையில்லாமல் மின்சாரம் வழங்க ஒட்டு மொத்தமாக தற்போது 41 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இதில் 4 துணை மின் நிலையங்கள் பணிகள் முடிந்துள்ளன.

இது தவிர 5 ஆண்டு திருத்தி அமைக்கப்பட்ட விரிவுப்படுத்தப்பட்ட மின் மேம்பாடு சீரமைப்பு திட்டத்தின்கீழ் 27 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதில் 3 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மொத்தம் அமைக்கப்பட வேண்டிய 68 துணை மின் நிலையங்களில் 7 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் 24 துணை மின்நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு பெறும்.

அனைத்து துணை மின் நிலையங்களும் அமைக்கப்பட்ட பின் சென்னை நகரில் மின்சாரம் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். தடையில்லா மின்சாரம் கிடைக்கும்" என்றார்.