Published:Updated:

மலேசிய விமான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்

Vikatan Correspondent
மலேசிய விமான சம்பவத்திற்கு  பிரதமர் மோடி இரங்கல்
மலேசிய விமான சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல்
மலேசிய விமான சம்பவத்திற்கு  பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி: மலேசிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதில் பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்தில் இருந்து 298 பேருடன் கோலாலம்பூர் சென்ற மலேசிய விமானம் ஒன்று உக்ரைன் - ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது  ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேரும் பலியானார்கள்.

இந்நிலையில், பலியானவர்களின் குடும்பத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களின் துயரங்களில் தாமும் பங்கு கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.