Published:Updated:

மலேசிய விமானத்தில் இந்தியர்கள் பயணிக்கவில்லை: மத்திய அரசு தகவல்

Vikatan Correspondent
மலேசிய விமானத்தில் இந்தியர்கள் பயணிக்கவில்லை: மத்திய அரசு தகவல்
மலேசிய விமானத்தில் இந்தியர்கள் பயணிக்கவில்லை: மத்திய அரசு தகவல்
மலேசிய விமானத்தில் இந்தியர்கள் பயணிக்கவில்லை: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: உக்ரைனில் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நெதர்லாந்தில் இருந்து 298 பேருடன் கோலாலம்பூர் சென்ற மலேசிய விமானம் ஒன்று உக்ரைன் - ரஷ்யா எல்லை அருகே பறந்து கொண்டிருந்தபோது   ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 298 பேரும் பலியானார்கள்.

இந்நிலையில், உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்தியர்கள் யாரும் பயணம் செய்யவில்லை என்று மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ தெரிவித்துள்ளார்.