Published:Updated:

காஸா- இஸ்ரேல் விவகாரம்: மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு!

Vikatan Correspondent
காஸா- இஸ்ரேல் விவகாரம்: மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு!
காஸா- இஸ்ரேல் விவகாரம்: மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு!
காஸா- இஸ்ரேல் விவகாரம்: மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு!

புதுடெல்லி: காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் பற்றி விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ தாக்குதல் பற்றி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

ஆனால், கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த அவைத் தலைவர் அனுமதி தர மறுத்துவிட்டார். இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பின்னர் அவை மீண்டும் கூடியது. அப்போதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.