Published:Updated:

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவர்: கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு!

Vikatan Correspondent

சென்னை: பொன்.ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராகி விட்டதால் தமிழகத்திற்கு விரைவில் பா.ஜ.க தலைவர் நியமிக்கப்பட உள்ளார். இதற்கான ஆலோசனையில் பா.ஜ.க மேலிட நிர்வாகிகள் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.

தமிழக பா.ஜ.க தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் தற்போது, மத்திய இணை அமைச்சராக இருக்கிறார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் டெல்லி மேலிடம் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக மேலிட பார்வையாளர்கள் முரளிதரராவ் மற்றும் சதீஷ் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயம் வந்தனர். புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக காலை 10 மணி முதல் மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வருகி்ன்றனர். மதியம் ஒரு மணிக்கு மாநில நிர்வாகிகளிடம் அவர்கள் கருத்து கேட்க உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, டெல்லி செல்லும் தமிழக மேலிட பார்வையாளர்கள், தேசிய தலைவர் அமீத் ஷாவிடம் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். இதைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் தமிழகத்திற்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க டெல்லி மேலிடம் முடிவு செய்கிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன்