Published:Updated:

'பல்டி' அடிப்பதுதான் பா.ஜ.க. வழக்கம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

Vikatan Correspondent
'பல்டி' அடிப்பதுதான் பா.ஜ.க. வழக்கம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
'பல்டி' அடிப்பதுதான் பா.ஜ.க. வழக்கம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
'பல்டி' அடிப்பதுதான் பா.ஜ.க. வழக்கம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

புதுடெல்லி: பா.ஜ.க. அனைத்து விஷயங்களிலும் 'பல்டி' அடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் சமீபத்தில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதுகுறித்து, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ''மின்சார கட்டணத்தை 30 சதவீத குறைப்போம் என பா.ஜ.க. உறுதி அளித்திருந்தது.

ஆனால், அவர்கள் அதை செய்யாமல், விலையை உயர்த்தி இருக்கிறார்கள். எல்லா விஷயத்திலும் இப்படி 'பல்டி' அடிப்பதுதான் பா.ஜ.க.வின் வழக்கமாக உள்ளது'' என்றார்.